பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 . பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

கொடிகளை வெட்டி வீழ்த்தப் பயன்படும் கோடரியும் மாறி மாறி ஏந்தும் அவர் கைகளும் காழ்ப்பு ஏறி உரம் பெற் றிருக்கும். வாழிடம் விட்டு ஆனிரைகளோடு வந்து விட்டால், மீண்டும் வாழிடம் அடைய நெடுங்காலம் ஆகும் ஆதலின், செல்லும் இடங்களில் தேவைப்படும் உடை, உணவாக்கும் கலன்கள் ஆகியவை இடப்பட்ட உரிகள் இரு புறமும் தொங்கும் காவடியை சுமந்து சுமந்து, மயிர் அடர்ந்த அவர் தோள்களும் தழும்பேறிக்கிடக்கும். தலை மயிரைப் பசும்பால் த.வி வாரிமுடித்து, கொம்புகளிலும் கொடிகளிலும் பூத்து மணக்கும் பலவண்ணக் காட்டு மலர்களைக் கலந்து கட்டிய மாலையைச் சூட்டிக்கொள்வர். உடுப்பது ஒரே ஆடையாகவும், உண்பது கூழாகவும் கொண்டு, போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதற்கு இலக்கியம்ாய் அமைதி வாழ்வு காணும் அவர்கள் ஈன்ற கன்றுகள் பால் நிறை அன்பு உடையவாகிய ஆனிரை களைப் பசும்புல் வெளியில் ம்ேயவிடுத்து, இசை இன்பத்தில் ஆழ்ந்து விடுவர். - 4. - -

முதற்கண் குழல் ஊதவிரும்பி, குழல் ஆக்குதற்கேற்ற மூங்கிலைத் தேர்ந்துகொண்டு, தீக்கடைக்கோலைக் கடைந்து தீ மூட்டி, அதில் காய்ச்சிய கம்பிகொண்டு மூங்கிலில் துளை யிடத் தொடங்குவர். மணக்கும் புகை முதற்கண் சிறிதே. தோன்றிப் படிப்படியாக மிகமிக, மூங்கிலில் கரிய துளைகள் வரிசையாக அமைய, மூங்கில் ஊது குழலாகிவிடும். குழலை. வாயில் வைத்து காதுக்கினிய பாடலைப் பண்ணோசை எழி வாசிக்கத் தலைப்பட்டுவிடுவர். போதும் கேட்டது என வெறுக்குமளவு நீண்ட நேரம் குழல் வாசித்த பின்னர், யாழ் ஒசையில், அவர்க்கு வேட்கை எழும். குமிழ மரத்தினின்றும் வேட்டிக்கொணர்ந்த உள் துளை பொருந்திய கொம்பை) யாழ்த் தண்டாகவும், கயிறு போலும், மெல்லிய மரவின்’ நாரை நரம்பாகவும் கொண்டு, குமிழங்கொம்பை வில், வடிவில் வளைத்து ஈர்த்துக்கட்டிய நரம்பைக் குறிஞ்சி ன்ன்னும் பண்ணோசை எழ, விரலால் எறிந்து இசைத்து.