பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'96- பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

வரகு, நெற்பயிர் போல் உயர்ந்து வளராது; வரகுக் கதிரும் நெற்கதிர் போல் நீளமாக இராது. தாளும் குட்டை; கதிரும் குட்ட்ை; அவ்வரகரிசிச் சோற்றை வடித்துக் கொட் டினால், வேலிகளில் நீண்ட கொடி விட்டுப் படர்ந்திருக்கும் சிறு பூளையின் வெண்ணிறம் வாய்ந்த சின்னம் சிறு மலர் களைப் பறித்துக் கொட்டி வைத்தாற் போலும் கவின் மிகு காட்சி அளிக்கும். சோற்றின் வனப்பு இது. மலை நாட்டில் கொத்துக் கொத்தாக மலர்ந்து மணக்கும் வேங்கையின் செந் நிற மலரை நினைவூட்டும் வகையில், கொடியில் கொத்துக் கொத்தாகக் காய்த்திருக்கும் அவரைக் காய்களை உரித்து எடுத்த கொட்டைகளை, உலையுள் நிறைய இட்டு நன்கு துழாவி எடுத்த பொரியலின் மணம் நுகர்ந்தவர் மூக்கைத் துளைக்கும். சுவை, உண்டவர் நா மணக்கப் பண்ணும். சுவை மிகு அவ்வுணவுண்டு இனிதே செல்வீராக என்றார்.

முள் உடுத்து - - - எழுகாடு ஓங்கிய தொழுவுடை வரைப்பின் பிடிக் கணத்தன்ன குதிர்உடை முன்றில் களிற்றுத்தாள் புரையும் திரிமரப் பந்தர் குறும்சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி நெடும் சுவர் பறைந்த புகைசூழ் கொட்டில் பருவ வானத்துப் பாமழை கடுப்பக் கருவை வேய்ந்த கவின்குடிச் சீறுர் நெடுங்குரல் பூளைப்பூவின் அன்ன . . குறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றிப் புகள் இணர் வேங்கை வீ கண்டன்ன - அவரை வான்புழுக்கு அட்டிப் பயில்வுற்று இன்சுவை மூரல் பெறுகுவீர் ‘ .’ - ‘ ‘.

- (184–196)

- • , (முள் உடுத்து எழு காடு-முள் கொண்டு வளர்ந்த மரங்களால் ஆன காடுகள்; ஓங்கிய தொழு உடை