பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. புன் செய்கில உழவர் பெருமை

உழுதுண்ணும் ஆயர்வாழ் சிற்றுனர்களின் சிறப்பை எடுத்துரைத்த புலவர், பெரும்பாணன், அடுத்துப்புக இருக் கும் மருதநில் மாண்பு குறித்துக் கூறத்தொடங்கினார். தொடங்கியவர், வரப்பு உயர நீர் உயர்ந்து நிற்கும் நன்செய் நிலங்களை மட்டுமேயல்லாமல், மருதநிலத்து உழவர் மழை ஒன்றையே கொண்டு விளைந்து பயன்தரும் புன்செய் நிலங் களையும் கொண்டிருப்பர் ஆதலாலும், அத்தகைய புன்செய். நிலங்கள், பெரும்பாலும், முல்லையும் மருதமும் கலக்கும் மேட்டுப் பகுதியிலேயே அமைந்திருக்கும் ஆதலாலும், நன்செய் நிலங்களின் நலம் பார்ாட்டுவதன் முன்னர், புன்செய் நில உழவு நலம் பற்றிக் கூறத் தொடங்கினார்.

மருத நிலத்து உழவர் மனைகளில், ஊர் உலகம் அனைத் தையும் ஒருசேரப்புரக்கவல்ல உணவுப் பொருள்கள் மண்டிக் கிடக்கும். அதற்குக் காரணம், நிலத்தைப் பலசால் உழுதல் வேண்டும் என்பது முதலாம், உழவு முறைகளை, அவர்கள் நன்கு பயின்று நடைமுறைப்படுத்தி வருவதே ஆம். அவர், களின் எருதுகளையும் ஏரையும் பார்த்தாலே, அவர்கள் எவ்வளவு சிறந்த உழவர்கள் என்பது புலப்பட்டு விடும். எருது களெல்லாம் எவ்வளவுபெரிய கலப்பையைப் பூட்டி, எவ்வளவு ஆழமாக அழுத்தி எவ்வளவு நேரம் உழுதாலும், சிறிதும் தளரா உரம் வாய்ந்தவை. ஏரில் பூட்டும்எருதுகள் இரண்டில், ஒன்று விரைந்து நடைபோட, ஒன்று மெல்ல அடியிட் டாலும், ஒன்று வலப்புறம் ஈர்க்க ஒன்று இடப்புறம் ஈர்த்து