பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா.கோவிந்தனார் 105

இவ்வின்ப விளையாடல்களை மறந்தனர். மனைநோக்கி விரைந்தனர். உழவு நலம் கருதி, அறுவடை முடியுங்காலும் வயல்களை அடுத்தே வாழ வேண்டியிருப்பதால், வயல்களை அடுத்து, வரப்பு ஓரங்களில் தற்காலிகமாக, சிறுசிறு குடிசை களைக் கட்டியிருந்தனர். புது வைக்கோல் வேயப்பட்ட அக்குடில்களுள் புகுந்த சிறுவர்கள் ஆங்குப் பானை நிறைய கட்டி கட்டியாகச் சோறு இருந்தாலும், அது பழஞ்சோறு என்பது கண்டு, . அதை வெறுத்துவிட்டு, குடிசையின் முன் புறத்தே இருக்கும் உரலில் அவித்த நெல் இட்டு, அவன் இடித்து உண்டு பசி ஆறிய பின்னர், அவலிடிக்கும் போது வாள் இடிக்காது, பாட்டுப் பாடிக்கொண்டே இடிக்க: அவ்வுலக்கைப் பாட்டொலியும், உலக்கை இடிக்க. உரல் எழுப்பும் ஒலியும் கேட்டு பயந்து தாம் வாழ்ந்திருந்த மரங், களை விட்டுப் பறந்தோடும், கிளிக் கூட்டங்களையும் வளைந்த மூக்கு, பச்சை வண்ணமேனி ஆகிய அவற்றின் உடலழகையும் கண்டு மகிழ்வாரர்யினர்.

‘மென்தோல் * - * , ,

மிதி.உலைக் கொல்லன் முறிகொடிற்று அன்ன கவைத்தாள் அலவன் அளற்று அளை சிதையப்

பைஞ்சாய் கொன்ற மண்படு மருப்பின் கார் ஏறு பொருத கண்ணகன் செறுவின் உழாஅ நுண்தொளி கிரவிய வினைஞர் முடிநாறு அழுத்திய நெடுநீர்ச் செறுவில் களைஞ்ர் தந்த கணைக்கால் நெய்தல் கள்கமழ் புதுப்பூ முனையின், முள்சினை முகைசூழ் தகட்ட பிறழ்வாய் முள்ளிக்

கொடுங்கால் மாமலர் கொய்துகொண்டு அவன, பஞ்சாய்க் கோரை பல்லிற்; சவட்டிப் . . புணர் நார்ப்பெய்த புனைவுஇன் கண்ணி

ஈர்வடை இருந்தலை ஆரக்குடிப்