பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுண்ர

பொன்காண் கட்டளை கடுப்பக் கண்பின் புன்காய்ச்சுண்ணம் புடைத்த மார்பின் இருப்பு வடித்தன்ன மடியா மென்தோல் கருங்கை வினைஞர் காதலம் சிறாஅர். பழஞ்சோற்றுப் அமலை முனை இ, வரம்பில் புதுவை வேய்ந்த கவிகுடில் முன்றில் அவல் எறி உலக்கைப் பாடு பிறந்து அயல, கொடுவாய்க் கிள்ளை படுபகை வெரூஉம்’.

(206—227).

(மென்தோல்-மெல்லிய தோலால் ஆன துருத் தியை மிதி உலை கொல்லன்-மிதித்து ஊதுகின்ற உலையில் தொழிலாற்றும் கொல்லனுடைய முறி கொடிறு அன்ன-முறிந்த கொறடு போன்ற களவத் தாள் அலவன்-கவர்த்த கால்களையுடைய நண்டினது: அளற்று அளை சிதைய-சேற்றில் தோண்டிய வளை அழியும்படி: பைஞ்சாய் கொன்ற-பசிய கோரைப் புல்லைக் குத்தி அழித்த, மண்படு மருப்பின்-மண்படிந்த கொம்புகளையுடைய, கார் ஏறு பொருத-கரிய எருது கள் போரிட்ட : கண் அகன் செறுவில்-இடம் அகன்ற நிலத்தில்; உழா நுண் தொளி-உழாதே உண்டான நுண்ணிய சேற்றை; நிரவிய விளைஞர்-மேடு பள்ளம் இல்லாமல் நிரவிய உழவர் முடிநாறு அழுத்தியமுடித்துக் கொண்டு வந்த நாற்றை நட்ட நெடுநீர்ச் செறுவில்-நிறைய நீர் நின்ற வயலில்; களைஞர் தந்த-களைபறிப்போர் களைந்து போட்ட, களைக் கால் நெய்தல்-பருத்த தாளையுடைய நெய்தலின், கள்கமழ் புதுப்பூ முனையின்-தேன் நாறும் புதுமலர் களை வெறுத்தாராயின், முள்கிளை-முள் நிறைந்த கொம்புகளையுடைய முகை சூழ்-அரும்புகள் நிறைந்த, தகட்ட-இதழ்களையுடைய பிறழ்வாய் - விரிந்த வாயையுடைய, முள்ளி-நீர் முள்ளியின்; கொடுங்கால்