பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 57, கோவிந்தன ri 107

மாம்லர்- விளைந்த காம்பினை உடைய கருநிறம் வாய்ந்த மலரை; கொய்து கொண்டு-பறித்துக் கொண்டு; அவண-அந்நிலத்தில் வளர்ந்திருக்கும். பஞ்சாய்க் கோரை பல்லிற் சவட்டி-பசிய தண்டாங் கோரையைப் பல்லால் மென்று; புணர்நார் பெய்தகிழித்து முடிந்த நாரால் தொடுத்த, புனைவு இன் கண்ணி-புனைதற்கு இனிய மாலையை; ஈர் உடைஈரப்பட்ட (அல்லது) ஈரும் பேனும் நிறைந்த இருந்தலை ஆரச்சூடி-கரிய தலையில் நிறையச்சூடி, பொன்காண் கட்டளை கருப்ப-பொன்னை உரைத்து மாற்றுகாணும் பொன்னுரை கல்லைப் போன்ற கண்பின் புன்கர்ய்ச் சுண்ணம்-கண்பின், என்ற சிறிய காயின், பொன்னி றத்தாதை, புடைத்த மார்பின்-பூசிக்கொண்ட மார்பினையும்; இரும்பு வடித்தன்ன-இரும்பை வடித்து எடுத்தாற்பேர்ன்ற, மடியா மென்தோல்திரையாத மெல்லிய தோலினையும் உடைய, கருங்கை வினைஞர்-வலியகைகளால் தொழில்புரிவாருடைய: காதல் அம் சிறாஅர்-அன்புமிக்க, அழகிய சிறுவர்கள்: பழம் சோற்று அமலை முனையின்-பழஞ்சோற்றுத் திரளை வெறுத்தால், வரம்பின்-வரப்பு ஒரத்தில். உள்ள புதுவை வேய்ந்த கவிகுடி முன்றில்-புதிய வைக்க்ோல் வேய்ந்த கவிந்த குடிலின் முற்றத்தில் அவல் எறி உலக்கைப்பாடு விறந்து-அவல் இடிக்கும். உலக்கைப் பாட்டொலி மிகுதல்ாலே; அயல, கொடு வாய்க்கிள்ளை-அயலில் வாழும் வளைந்த மூக்கினை உடைய கிளிகள்; படுபகை வெருஉம்-தமக்கு நேர்ந்த பகையொலியாகக் கொண்டு அஞ்சும்,

8-2 பொன்மலை நிகர் கெல் மலை

நெற்பயிர் விளைந்து, பதரோ, பசுங்காயோ ஒன்று கூட இல்லாமல் நெல்மணிகள் முற்றிவிடும். கொட்டினால் கடுக்கும் செங்குளவிக் கூட்டம் ஒரு சேரத் திரண்டிருப்பது