பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t

கா:க்ோவிந்தனார். 109

பின்னும் வலையுள் வந்து விழும் பூச்சிகளை உண்டு உயிர் வாழும் சிலந்திக்கூட்டம், வளைத்து வளைத்துப் பின்னிய

வலைகள், இரவில் வீழ்ந்த பனித்துளிகளால் நிறைந்து வெண்ணிறம் காட்ட, அந்நிலையில் நிற்கும் கதிர்ப்போர்

காட்சி தம் சுற்றத்தோடு கூடிக் கைகோத்துத் துணங்கைக் கூத்து ஆடக் கூடிநிற்கும் பூதகணங்கள், வெண்ணிற ஆடை

உடுத்திருக்கும் அழகிய காட்சியை நினைவூட்ட, அக்கதிர்ப்

போர்களை மகிழ்ச்சி பொங்கச் சுற்றி வரும் உழவர்கள்

கதிர் களவாடப்பட்டிருப்பின், களவாடியவர் கைப்பட்டுச்

சிலந்திவலை அறுபட்டிருக்கும்; அது சிறிதும் அறுபடா

மையால், கதிர் களவு போகவில்லை என்ற மனநிறைவோடு

போர் அழித்துக் கடாவிடத்தொடங்குவர்.

போரை, அடிகானப் பிரித்துப் போடப்போட், காளை களை ஒருங்கு பிணித்து மிதிக்க விடுவர், தாளில் ஒரு நெல் கூட இல்லை; அறவே உதிர்ந்து விட்டன என்பதை உணர்ந்ததும், வைக்கோலையும் கூளத்தையும் அகற்றி, நெல்லைத் தனியே பிரித்த பின்னர், மேல்காற்று வீசும் காலம் பார்த்திருந்து, நெல்லை, முறங்களில் வாரித்துாற்ற, நெல்லோடு கலந்திருக்கும் ஓரிரு பதரும், சிறு தூசுகளும் நீங்க, அகத்துள அரிசி செந்நிறம் காட்டினும், புறம் பொன்னிறமே காட்டும் நெல்மணிகள், வடதிசைக் கண்ணதாகிய பொன்மலையாம் மேருமலையே களத்தில் வந்து நின்றுவிட்டதோ எனக் கருதுமளவு, மலைபோல் குவிந்துவிடும். நெல்கொண்ட உழவர்கள், களம்பாடும் பொருநர்க்கும் பிற இரவலர்க்கும் நெல்வழங்கி, பெற்ற அவர்கள் மகிழ்ந்து வாழ்த்த மனம் நிறை மகிழ்வோடும், நெற்பொதிகளோடும், நகரில் உள்ள தம்மனைபுகுவர்.

“நீங்கா யாணர் வாங்கு கதிர்க் கழனி

கடுப்பு உட்ைப் பறவைச் சாதி அன்ன பைது அற விளைந்த பெரும் செந்நெல்லின் தூம்பு உடைத் திரள் தாள் துமித்து வினைஞர்