பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#10 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுர்ை

பாம்புஉறை மருதின் ஓங்குசினை நிழல் பலிபெறு வியன்களம் மலிய ஏற்றிக் - கணங்கொள் சுற்றமொடு கைபுணர்ந்து ஆடும் துணங்கை அம்பூதம் துகில் உடுத்தவைபோல் சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின்

குழுமுகிலைப் போரின் முழுமுதல் தொலைச்சிப் பகடு ஊர்பு இழிந்த பின்றைத் துகள்தப வையும் துரும்பும் நீக்கிப் பைது அறக் குடகாற்று எறிந்த குப்பை, வடபால் செம்பொன் மலையின் சிறப்பத் தோன்றும்.’ - - - - - (228–241)

(நீங்கா யாணர் - குறையாத புதுவருவாயினை உடைய வாங்கு கதிர்க் கழனி - வளையும் கதிர்களை உடைய கழனியில்; கடுப்பு உடைப் பறவைச் சாதி அன்ன - கொட்டினால் கடுக்கும் செங்குளவிக் கூட்டத் தை ஒத்த பைது அற விளைந்த பெரும் செந்நெல்லின் - பசுங், காயும், பதரும் அறும்படி முற்றிவிளைந்த பெரிய செந் நெல்லின்; தூம்பு உடைத்திரள்தாள் - உள்ளே துளை உடையதாகிய திரண்ட த்ாளை அறுத்த உழவர்; பாம்பு உறை மருதில் - பாம்பு வாழும் மருதமரத்தின்: - ஒங்கு கிளை நிழல் - உயர்ந்த கிளைகளின் நிழலின்; பவிபெறு வியன்கலம் -இரவ்லர் பிச்சை பெறும் அகன்ற களத்தில்; மலிய ஏற்றி - நிறைய, போராக இட்டு; கணம் கொள் சுற்றமொடு- மிகப் பெரிய சுற்றத்தோடு: கைபுணர்ந்து ஆடும்- கைகோர்த்து ஒழுங்காக நின்று ஆடும்; துணங்கை அம்பூதம் - துணங்கைக் கூத்தில் வல்ல அழகிய பூதங்கள்; துகில் உடுத்தவை போல் - வெண்ணிற ஆடை உடுத்து நிற்பது போல்; சிலம்பி வால் நூல் - சிலந்தியின் வெண்ணிற நூல்; வலந்த மருங்கின் - பின்னப்பட்ட பக்கங்களையுடைய குழுமு நிலப் போரின்-கோபுரம் போல் குவிந்திருக்கும் போர்