பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 பெரும்பாணாற்அப்படைவிளக்கவுரை

அவ்வூரை விட்டுப் பிரிந்தும் அறியார் என அப்பேரூர்களின் பெருமையினைப் பெரும்பாணனுக்கு எடுத்துரைத்த புலவர், பெரும்பாண நீயும் உன் சுற்றமும் அவ்வூரில் சென்று தங்குவீராயின், அவ்வூரார், உன்னைத் தங்கள் ஆருயிர் அனைய உறவினர்களாகவே கொண்டு பெருவிருந்து அளிப்பர். அவர்கள் உழுது கொண்டது. செந்நெல். ஆனால், அதை உங்களுக்கு அளிக்க மாட்டார்கள்: ஆகும்பாடுபட்டு ‘உழவுத் தொழில் புரிவார் மட்டுமே விளைவிக்க வல்லதும், துய வெண்ணிறம் வாய்ந்ததுமான மெல்லிய அரிசியைத் தேடிப் பெற்று ஆக்கிய சோற்றையே படைப்பர்; துணைக் கறியாக, தாள்தோறும் வழக்கமாக உண்ணும் கறிகள்ை, அன்று சமைக்காது, சிறப்பு விருந்தினர்களாக வருவார்க்கு மட்டுமே அளிப்பதான, தங்கள் மனையில் தாம் வளர்க்கும் கோழியை அடித்துக் செய்யும் கோழிப் பொறியவையே படைப்பர் : சிறந்த அவ்வுணவுண்டு மகிழ்த்து செல்வீராக’ என்றார். . - - -

“பகட்டுஆ ஈன்ற கொடுகடைக் குழவிக்,

கவைத் தாம்பு தெர்டுத்த காழ் ஊன்று அல்குல், ஏணி எய்தா நீள்கெடும் மார்பின் - முகடுதுமித்து அடுக்கிய பழம்பல் உணவின் குமரி மூத்த கூடு ஓங்கு நல்லில் . . . . . தச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த ஊரா நற்றேர் உருட்டிய புதல்வர் தளர்நடை வருத்தம் வீட, அலர்முலைச் செவிலியம் பெண்டிர்த் தழீஇப் பால் ஆர்ந்து அமளித் துஞ்சும் அழகுடை கல்லில் தொல்பசி அறியாத் துளங்கா இருக்கை மல்லல் பேரூர் மடியின், மடியா -

விளைஞர் தந்த வெண்கெல் வல்சி மனைவாழ் அளகின் வாட்டொடும் பெருகுவீர்

- * - . . (243—256}.