பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 117

‘மழை விளையாடும் கழைவளர் அடுக்கத்து

அணங்கு உடை யாளி தாக்கலின் பலவுடன் கணஞ்சால் வேழம் கதழ்வு உற்றாங்கு எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை விசயம் அடுஉம் புகைசூழ் ஆலைதொறும் கரும்பின் தீஞ்சாறு விரும்பினர் மிசைமின்’

(257–262)

(மழை விளையாடும் கழை வளர் அடுக்கத்து-மழை பொழியும் மூங்கில் வளரும் பக்கமலைகளில்: அணங்கு உடை யாளிதாக்கலின்-பிற உயிர்களுக்கு வருத்து தலைச் செய்யும், யாளி தாக்குவதால், பல உடன் கணம் சால் வேழம் கதழ்வுற்றாங்கு-பலவும் கூடிக் கூட்டமாக வாழும் யானைகள் கலங்கிக் கதறினாற் போல; எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலைகரும்பில் சாறு பிழியும் எந்திரம் ஆரவாரிக்கும் இடையறாத ஓசை உடைய, விசயம் இடுஉம்-புகை சூழ் ஆலைதோறும்; கருப்பஞ்சாற்றைக் கட்டியாகக் காய்ச்சும் புகை சூழ்ந்த ஆலைகள் தோறும்; கரும்பின் தீஞ்சாறு-கரும்பின் இனிய சாற்றை விரும்பினன் மிசைமின்-விருப்பம் உடையவர் பருகுவீர்களாக.)