பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 119.

கடல் மீன்களைக் காட்டிலும் குளத்து மீன்களே சுவை மிகுந்தவை; பெருவிலை தருபவை; கட்டுமரம் ஏறிச்சென்று கடலோடு போராட வேண்டுமே என்ற கவலை தராமல் பெறக் கூடியவை என்பதால், குளத்து மீன் பிடிப்பதிலேயே ஆர்வம் காட்டுவர். வலைஞர் குடியிருப்பு கடற்கரையைச் சார்ந்திருக்கும். கடல் நீர் உப்பு நிறைந்து உண்ணவும் மண்ணவும் பயன்படாது. அதனால், அப்பகுதிவாழ் வலை ஞர்கள், குடிப்பதற்கு நீர் பெற ஒரு குளம். குளிப்பதற்கு ஒரு குளம், உள் நாட்டு மீன் வகைகளை வளர்ப்பதற்குச் சில குளங்கள் எனத், தம் குடியிருப்பைச் சுற்றிக் குளங்களாகவே வெட்டி வைத்திருப்பர். -

குளத்தில் நீர் வற்றி விட்டால், குடிப்பதற்கு நீர் இல் லாமல் போகும் என்பது மட்டுமன்று; நீர் வற்றி விட்டால், மீன் அற்றுப் போக, அவர் பிழைப்பும் அற்றுப் போகும்: அதனால், குளத்து நீரை வற்ற விடாது காப்பதில் விழிப்பா யிருப்பர். அதனால், அவர்கள் வெட்டியிருக்கும் குளங்கள், மழை தரும் மாரிக் காலம் குறைந்து, மழை தராக் கோடைக் காலம் நீண்டு போகும் ஆண்டிலும், உயர்த்திய கையோடு இறங்குவார் கையும் மறைய நீர் நிறைந்திருக்கு மளவு மிக ஆழம் உடையதாகவே இருக்கும். -

மீன் வளர்க்கும் எல்லாக் குளங்களிலும், எல்லா வகை மீன்களையும் ஒரு சேரக் கலந்து வளர்க்க மாட்டார்கள். பெரு மீன்கள், சிறு மீன்களைத் தின்று அழித்து விடும் ஆதலாலும், சிறு மீன்களை வலை வீசி வாரிக் கொள்ள வேண்டும்; பெரு மீன்களைத் தூண்டில் கொண்டு பிடிக்க வேண்டும் ஆதலாலும், கண்டை, கயல், இறால் போலும் சிறு மீன்களை ஒரு குளத்திலும், வரால், வாளை போலும் பெரு மீன்களை வேறு குளத்திலுமாக வளர்த்திருப்பர்.

அவரை முதலாம் கொடி படர்ந்திருக்கும் பந்தலின்கீழ் மணற்பரப்பில் ஒன்றுகூடும் வலைஞர், ஊரெல்லாம் திரண்டு