பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ா. கோவிந்தனார் - 121

காடி எவ்வளவு புளிப்பு ஏறுகிறதோ, அவ்வளவும் சுவை மிகும் என்பதால், வாய் அகன்ற உறுதியான பெரிய சாடியில் முழுமையாக இரண்டு பகல், இரண்டு இரவு கழியப் புளிக்க வைத்துப் பிறகு அடுப்பிலேற்றிக் கொதிக்க வைத்து, இறக்கி கையிட்டு அலைத்தும் பிழிந்தும், நெய்யரி கொண்டு வடித்தும். கொண்ட மணம் மிக்க கள்ளையும், நெருப்பிலே இட்டுச் சுட்டு எடுத்த மீனையும் அன்போடு வழங்குவார்கள். அத்தகைய உணவின்பால் உங்களுக்கு விருப்பம் இல்லாது போயினும். நெடும் வழி நடையாலும். பெரும் பசியாலும் உண்டாகும் தளர்ச்சி போகவாவது சிறிது உண்டுசெல்வீராக என்றார். - -

‘வேழம் கிரைத்து வெண்கோடு விரைஇத்

தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த குறிஇறைக் குர்ம்பைப், பறியுடை முன்றில், கொடுங்கால் புன்னைக் கோடுதுமித்து இயற்றிய பைங்காய் தூங்கும் பாய்மணல் பந்தல், - இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றிப், புலவுதுனைப் பகழியும் சிலையும் மானச், செல்வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும் மை இரும்குட்டத்து மகவொடு வழங்கிக், கோடை டிேனும் குறைபடல் அறியாத் தோள்தாழ் குளத்த கோடு காத்திருக்கும் கொடுமுடி வலைஞர் குடிவயின் சேப்பின் அவையா அரிசி அம்களித் துழவை மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றிப், பாம்புறை புற்றில் குரும்பி ஏய்க்கும் பூம்புற நல்லடை அளை இத், தேம்பட எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி வல்வாய்ச் சாடியின் வழைச்சு அற விளைந்த வெந்நீர் அரியல் விரல்அலை நறும்பிழி தண்மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்

, . . . - (263–282)