பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பெரும்பாண்ாற்றுப்படை விளக்கவுரை

_:

வேழம்நிரைத்து-சிறு மூங்கிலை வரிசையாகச் சார்த்தி. வெண்கோடு விரைஇ-காஞ்சி அல்லது வஞ்சி யின் வெள்ளிய கொம்புகளை இடையிடையே கலந்து, தாழை முடித்து-தாழை நாரால் கட்டி, தருப்பை வய்ந்த-தருப்பைப் புல்லால் வேயப்பட்ட, குறி இறைக் குரம்பை-குறுகிய இறப்பையையுடைய குடிலி னுடைய, பறி உடை முன்றில்-மீன் பிடிக்கும் பறிகளை யுடைய முற்றத்தில், கொடுங்கால் புன்னை-வளைந்த, கால்களையுடைய புன்னை மரத்தின், கோடு துமித்து இயற்றிய-கொம்புகளை வெட்டி நட்டு போடப்பட்ட, பைங்காய் துரங்கும்-அவரை போலும் பசிய காய்கள் காய்த்துத் தொங்கும், பாய் மணல் பந்தர்-விரிந்த மணல் பரந்த பந்தரில், இளையரும் முதியரும் கிளை யுடன் துவன்றி-இளைஞர்களும் முதியவர்களுமாக சுற்றத்தாரோடு நிறைந்திருந்து, புலவு நுளைப் பகழியும் சிலையும் மான-புலால் நாறும் முனையையுடைய அம்பையும் வில்லையும் ஒப்ப, செவ்வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும்-செவ்வரி படர்ந்த கயல் மீன்க ளோடு, பசிய இறா மீன்கள் பிறழும், மை இருங் குட்டத்து மகவொடு வழங்கி-ஆழம்மிகுதியால் கருமை நிறம் வாய்ந்த நீர் நிறைந்திருக்கும் ஆழ்ந்த குளங்களில், இளம் பிள்ளைகளோடு இறங்கி, அளைந்து மீனைப் பிடித்து, கோடை நீடினும் குறைபடல் அறியாகோடைக் காலம் நீடித்தாலும் வற்றுதல் அறியாதவாறு, தோள் தாழ்குளத்த-நீர் ஆழம் காட்ட நீருள் இறங்கி உயர்த்திய கையும் அமிழ்ந்து போகும் ஆழம் வாய்ந்த குளங்களின், கோடுர காத்திருக்கும்-கரையில் காவல் மேற்கொண்டிருக்கும், கொடுமுடி வலைஞர்-பின்னிய முடிகளைக் கொண்ட வலைகளை உடைய மீனவர், குடிவயின் சேப்பின்-குடியிருப்பில் தங்குவீராயின்,