பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.கா. கோவிந்தனார் 123

அவையா அரிசி-கொழியல் போகக் குற்றாத அரிசியை, அம் களித் துழவை-இனிய களியாகத் துழாவி அடப்

பட்டதை, மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றி-அகன்ற

வாயையுடைய தட்டில் வெப்பம் போக ஆற்றி: பாம்பு

உறை புற்றின் குறும்பி ஏய்க்கும்-பாம்பு வாழும் புற்றி

லிருந்து வெளிப்பட்ட ஈசலை ஒக்கும், பூம்புற நல்லடை

அளைஇ-அழகிய புறத்தோற்றத்தை உடைய நெல் முளையால் ஆன அடை கலந்து, தேம்பட-இனிமை

மிகும்படி, எல்லையும் இரவும் இருமுறை, கழிப்பி

இரண்டு இரவும், இரண்டு பகலும் கழித்து, வல்வாய்ச்

சாடியின்-வலிய வாய் அமைந்த சாடியில் வைத்து, வழைச்சு அற விளைந்த-இளமை நாற்றம் அற்றுப்

போக முதிர்ந்த, வெந்நீர் அரியல் விரல் அலை நறும் பிழி-வெந்நீரோடு கொதிக்க வைத்து, நெய்யரியால் வடிகட்டி, விரல்களால் அலைத்துப் பிழிந்தெடுத்த் நல்ல கள்ளை, தண்மீன் சூட்டொடு-பச்சை மீனைச் சுட்ட தாகிய வெஞ்சனத்தோடு, தளர்தலும் பெறுகுவிர்தளர்ந்து போகு நிலையில் பெறுவீர்கள். -