பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. தாமரைக்குளம்

r வலைஞர்பால் விடைகொள்ளும் ஓரிரு நாழிகைக்குள்

அந்தணர் குடியிருப்பை அடைந்துவிடலாம் எனினும், இடை வழியில் உள்ள தாமரைக் குளக்கரையிலும், குவளை மலர்க்

குளக்கரையிலும், பெரும்பாணனைச் சிறிது நேரம் இருக்க

வைத்து, அவற்றின் இயற்கை அழகை அனுபவித்து, இன்புறச் செய்துள்ளார் புலவர். -

வலைஞ்ர் குடியிருப்பிற்கு அணித்தாக ஒரு குளம், வாளையும், வராலும் வளரும் அக்குளக்கரையில், மீன் பிடிப் பதில் வல்லவர் வரிசையிாக அமர்ந்திருப்பர். தூண்டில் முள்ளில் இடுவதற்கான பச்சை இறைச்சி இருக்கும் தோற்பை, அவர் தோளில் தொங்கிக் கொண்டிருக்கும்; கையில் நீண்ட மூங்கிற் கோலாலான தூண்டில், மூங்கில் முனையில் வலித்து முடியப்பட்ட மெல்லிய வலிய கயிறு: கயிற்றின் மறு முனையில் உட்புறம் வளைந்த தூண்டில்முள் அம்முள்ளில், அது முள் எனத் தெரியவாறு முழுமையாக் மறையும்படி கோத்து வைக்கப்பட்ட இறைச்சித் துண்டு; நீருள் போடப்படும் அத்து.ாண்டிலை, அவர் கைகள் விட்டு விட்டு அசைத்துக் கொண்டிருக்கும். ‘. -

திடுமெனத் தூண்டில்ை யாரோ பற்றி மறுபுறம் வலிந்து ஈர்ப்பது போன்ற உணர்வு; உடனே அவர்முகம் . மலர்ந்துவிடும். துரண்டிலில் பருமீன் அகப்பட்டுக்கொண்