பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் • 125

டது. அறிந்து, துரண்டிலை விரைந்து வலித்துத் தூக்க, துரண்டில் முள்ளில் அகப்பட்டுக் கொள்ளாமலே, மிகவும் பக்குவமாகத், தூண்டில் முள்ளில் கோத்து வைத்த இறைச்சியை மட்டும் கவர்ந்து சென்றுவிட்டது காண, அவர் பெரிதும் ஏமாற்றம் அடைவர். மீன் பிடிப்பதில் அவர் வல்லவர் என்றால், அக்குளத்து மீன்கள் அவரைவிடத் திறமை வாய்ந்தவை எனினும், வலைஞர், உள்ளம் சோர்ந்து விடாது, உறுதியோடு இருந்து, வரால்களை வேண்டுமளவு அகப்படுத்திச் செல்லவே முயற்சிப்பர். -

தூண்டில் முள்ளில் அகப்பட இருந்ததிலிருந்து, தப்பிப் பிழைத்த மீன் மருட்சியுற்றுப்போகும். அந்நிலையில். குளக் கரையில் செழுமையாக வளர்ந்திருக்கும் பிரம்புக் கொடி களின் நிழல், மெல்ல அலைவீசிக் கொண்டிருக்கும் நீருள் தெரிவதைக் காணும் அம்மீன்கள், அவற்றையும் தூண்டி லாகக் கருதி, அஞ்சி மீண்டும் மருளும். இவ்வாறு மருட்சி மேல் மருட்சியுற்றுப்போகும் அவை, தம்மை அறியாமல், தாமாகவே சென்று தூண்டிலில் அகப்பட்டுக் கொள்ளும்.

குளத்தின் ஒரு துறையில், அவ்வாறு சிலர் மீன் பிடித் திருக்க, வேறு துறையில், பெருநீரில் குதித்து நீந்த வல்லவர் சிலர், நீந்தி மகிழ்வர். இவை அனைத்திற்கும் மேலாகக், குளமே தீப்பற்றி எரிகிறதோ என எண்ணுமளவு, குளம் நிறைய, செந்தாமரை மலர்கள், இலை தெரியாவாறு மலர்ந் திருக்கும். திருமகளும் கலைமகளும் விரும்பி அமரும் மலர்கள்ாதலின், பெரும்பாண அம்மலர்க் காட்சியைக் கண்டு மகிழ்வதல்லது பறித்துச் சூட விரும்பாதீர்கள்” என்றார். - - - -

அடுத்து ஒருகுளம். ஆங்கு மீன் பிடிப்பாரும் இலர்: நீந்தி மகிழ்வாரும் இலர்; ஆயினும், அது தாமரைக் குளத் தினும் அைழகுடையது. அதில், செவ்வரக்கை உருக்கி