பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<$#ff”. கோவிந்தனார் - 127

_50

பச்சூன் பெய்த சுவல் பிணி பைந் தோல்-வேகாத புதிய இறைச்சி இடப்பட்ட, தோளில் மாட்டித் தொங்கும் பசிய தோற்பையினை உடைய, கோள்வல் பாண் மகன்-மீனைத் தப்பாமல் பிடிக்க வல்ல பாணர் குடியில் பிறந்தவனுடைய, தலை வலித்து யாத்தமுனையில் இறுக்கிக் க்ட்டிய, நெடுங்கழைத் தூண்டில் நடுங்க- நீண்ட மூங்கிற் கோலாலான தூண்டில் நடுங்கும்படி, நாண் கொளி இயகொடுவாய் இரும்பின் மடிதலை புலம்ப-கயிற்றனாலே கட்டப்பட்ட வளைந்த முனையையுடைய இரும்பாலான தூண்டில் முள், தன்னிடத்தே கோத்து வைக்கப்பட்ட இரை கவரப்பட்டு தனித்து வறிதே கிடக்க பொதி இரை கதுவியதுரண்டிலில் பொதிந்து வைக்கப்பட்ட இரையைக் கெளவிக்கொண்டு பிழைத்து ஓடிய,போழ்வாய்வாளை -பிளந்தபெரிய வாயையுடைய வாளைமீன்; நீர் நணப் பிரம்பின்-நீர் அணித்தே முளைத்திருக்கும் பிரம்புக் கொடியின், நடுங்கு நிழல் வெரூஉம்-அசையும் நீரில் தெரிவதால் அசையும் நிழலுக்கு அஞ்சும், நீத்து உடை நெடுங் கயம்-நீந்தி விளையாடுதற்கு உரிய பெரிய குளத்தில், தீப்பட மலர்ந்த கடவள் ஒண்பூ-குளம் இப்பட்டு விட்டதே என மருளுமளவு நிறைய மலர்ந்த கடவுள் விரும்பும் சிறந்த தரமரை மலரை, அடைதல் - ஒம்பி-பறித்துச் சூடுதலைக் கைவிட்டு, உறை கால் மாறிய-மழை பெய்தலைக் கைவிட்ட, ஒங்கு உயர் ந்னந்தலை அகன்ற வானத்து-ஒங்கி உயர்ந்த பரந்த இடம் அகன்ற வானத்தில் தோன்றும், குறைவில், ஏய்ப்ப-விட்டு விட்டுக் காட்சி தரும் வானவில்லை ஒப்ப, அரக்கு இதழ் குவளையொடு, நீலம் நீடிசெவ்வரக்குப் போன்ற செவ்விதழ்களையுடைய குவளை மலரோடு, நீல மலரும் மலர்ந்து முரண்பூ மலிந்த