பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+fr. கோவித்தனார் 129

கன்று செழுமையாக வளர்வதற்குத் தேவைப்படுமளவு, - அதைக் குடிக்கவிட்டு, எஞ்சிய பாலையே அவர் கறந்து கொள்வர். அதை. அக்கன்றின் உட்ல் செழிப்பே உணர்த்தி

அவர் வீடுகள், அவர்தம் புறநலனைப் புலப்படுத்தும் வகையில், நாள்தோறும், பசும் சாணமும் செம்மண்ணும் கொண்டு மெழுகப்பட்டுத் தூய்மையுடையதாக இருக்கும். மனையின் அகத்தே அவர் வழிபடு தெய்வங்களின் படிவங்கள் நிறுவப்பட்டிருக்கும். அந்தணர் புலால் உணவைவெறுப்பவர். அதனால், பிறர் மனைகளில், அது குறித்து வளர்க்கப்படும் கோழியை அந்தணர் குடியிருப்பில் காணல் இயலாது. உலகத்து மக்கள் அறவழி வாழ மறை ஒதிக்காவல் புரிபவர் அந்தணர்; அதனால், அவர் உடைமைகளைக் காக்கும் பொறுப்பு அவர்க்கு இல்லை; அதனால் காவல் கருதி நாய் வளர்ப்பது அவர்க்குத் தேவையற்றது. மேலும், நாய், தான் உண்ணும் உணவு கிடைக்கும் இடத்திலேயே சுற்றி சுற்றித் திரியும். அந்தணர் இல்லத்தில் அது விரும்பும் உணவு கிடைக்காது. அதனால் நாய்களும், அந்தணர் சேரியை அணுகுவதில்லை. - . . . . .

ஆங்கு, வேத ஒலி ஓயாமல் கேட்டுக் கொண்டிருக்கும். மறையவர், குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே மறை ஒதுவர், காலை முதல் மாலை வரை இடைவிடாமலும் ஓதிக் கொண்டிருப்பவரோ என ஐயுற்று நோக்கினால், அவ்வாறு ஓயாமல் ஒதுவது அந்தணர் அல்லர், அந்தணர் மனைகள் மீதும், மரக் கிளைகள் மீதும் அமர்ந்திருக்கும் கிளிக்கூட்டங்கள் தான், கூறியது கூறும் கிளிப்பிள்ளை என்ற முது மொழியை மெய்ப்பிக்கும் வகையில், அந்தணர் ஓதுவது கேட்டுக் கேட்டுக் கற்றுக் கொண்ட அம் மறையை, மீண்டும் மீண்டும் ஒதிக்கொண்டிருப்பது புலப்படும். நான்ம்ன்றய்ை, வரும் புதியவர்க்கெல்லாம் பிழையறக் கற்பிக்குமளவு கிள் -

Gl r(t5—9 - - -