பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

நீரில்வந்த நிமிர்பரிப்புரவியும் காலின்வந்த கருங்கறி மூடையும்

வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு.

- -பட்டினப்பாலை-185-193

புகார்த்துறையில், உரிய சுங்கத்தினைப் பெற்றுப் பெறப்பட்ட பொருள்கள் மீது, பெற்றதற்காம் அறிகுறி யாகத் தங்கள் அரச இலாஞ்சனையாகிய புலியைப் பொறித்துப் போகவிடுவர் என பட்டினப்பாலையிலும், உள்நாட்டுப் பெருவழிகளில் வண்டிகளில் கொண்டுவரப்படும் பொருள்கள் மீது சுங்கம் கொண்டனர் என பெரும் பாணாற்றுப்படையிலும் அக்கால அரசர்கள் மேற்கொண்ட நடைமுறைகளை புலப்படுத்தியுள்ளார்.

உல்கு செயக் குறைபடாது

புலிபொறித்துப் புறம்போக்கி

-பட்டினப்பாலை-120-135

அணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும்

உல்குடைப் பெருவழி’

- -பெரும்பாணாற்றுப்படை-79-82.

சோணாட்டின் செழிப்புக்குக் காரணமான காவிரியை, அதன் பிறப்பிடம் கூறிப் பாராட்டும் புலமை நலம் போற்றற்குரியது. - -

`s வான் பொய்ப்பினும் தான்.பொய்யா மலைத்தலைய கடற்காவிரி புனல்பரந்து பொன்கொழிக்கும்”

-பட்டினப்புாலை-5-7