பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

களும் மற்ை ஒதும் என்றால், அக்கிளிகள் பயில மறை ஒதும்

அந்தணர் பெருமையைக் கூறவும் இயலுமோ! -

இவ் வகையால், அந்தணர் இல்லத்து ஆடவர் சிறந்து விளங்குவது போலவே, அவ்வில்லத்து மகளிரும் நனி சிறந்து விளங்குவர். வானம் பெரிது; அதில் உலா வரும் மீன்களும் எண்ணிறந்தன; ஆயினும், அவற்றுள், உலகோரால் வழி படத்தக்கது, உற்று நோக்குவார்க்கு மட்டுமே புலப்படும் சிறு மீனாம், அருந்ததியாகும்; அது போல் இளையரும்: முதியவரும், ஆடவரும் மகளிருமாகப் பலர் கூடி நடத்தும் இல்லற வாழ்க்கையில், மனைவியின் பங்கு சிறிதே என். றாலும், அருந்ததி நிகர் கற்புடைமையால் அவள் அம்மனைக்கு ஒளி தந்து நிற்பர்ள். - . . . . .

கற்பாம் அக அழகு வாய்க்கப் பெற்ற அவள் புற அழகிலும் குறையற்றிருப்பாள். ஒளி வீசும் நுதல் அழகு ப்ோலும் இயற்கை வனப்போடு, கைவளை அணிதல் முதலாம் செயற்கை அழகும் உடையவள் அவள். அது மட்டு - மன்று: செயல் திறமும் வாய்க்கப் பெற்றவள். அரிசியும், காய்களும் நல்லனவாகத் தேர்ந்து கொண்டு, உரிய காலத்தில் அடுக்களை புகுந்து, சுவை மிகச் சமைத்து, அன்புடன் படைப்பதிலும் அவள் வல்லவள். அரிசி வகை களுள் சிறந்ததான கருடன் சம்பா அரிசியால் சோறு ஆக்கி, மாதுளை வகைகளில் கறிக்கு உதவும் கொம்மட்டி மாதுளங் காயை வகிர்ந்து, ஆவின் பால் காய்ச்சி ஆக்கிய நல்ல மோரைக் கடைந்து எடுத்த வெண்ணெயில், சிவந்து பதமுற வதக்கி, மிளகுப்பொடியும் கறிவேப்பிலையும் இட்டுக் கறி சன்மத்து, வற்றி இலை உதிர்ந்து போய் விடாது தழைத்துப் பூத்துக் குலுங்கும் வளமான மரத்திலிருந்து பறித்துக் கொணர்ந்த இளம் பிஞ்சுகளாகிய மாவடுவைப் பிளந்து போட்டு, உப்பும் பிறவும் இட்டு ஊற வைத்து ஊறுகாய் செய்து, வரும் விருந்தினர்களை முக மலர்ந்து வரவேற்று,