பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

சேப்பின்-வேதக் காவலராகிய அந்தணர் வாழும் ஊரில் தங்குவீராயின், பெருநல் வானத்து வடவயின் விளங்கும்-பெரிய நல்ல வானத்தில், வடபகுதியில்

ஒளிவிடும், சிறு மீன், புரையும் கற்பின்-சிறிய மீனாகிய அருந்ததியை ஒக்கும் கற்பினையும், நறு நுதல் வளைக்கை மகடூஉ-நல்ல மணம் நாறும் நெற்றி யையும், வளை அணிந்த கைகளையும் உடைய பார்ப்பினி, வயின் அறிந்து அட்ட-பதம் அறிந்து ஆக்கிய, சுடர்க் கடை-ஒளி வீசும் முனைகளை யுடைய, பறவைப் பெயர்ப் படு வத்தம்-கருடன் என்ற பறவை யின் பெயர் பெற்ற கருட்ன் சம்பா என்ற நெல் சோற்றி னையும், சேதா நறு மோர் வெண்ணையின்-சிவந்த பசுவின் மணம் மிக்க மோரைக் கடைந்து கொண்ட வெண்ணையில் வெந்ததினால். உருப்புறு மாதுளத்து பசுங்காய்ப் போழோடு-சிவந்த மாதுள்ங்காயின் வகி ரோடு, கறி கலந்து-மிளகுப் பொடி கலந்து, கஞ்சிக. நறுமுறி அளை இ-கருவ்ேப்பிலையின் நல்ல இலை. களைக் கலந்து ஆக்கிய கறியையும், பைந்துணர் நெடு. மரக் கொக்கின்-பசிய இளந்தளிர்களையுடைய உயர்ந்த மாமரத்தின், நறு வடி விதிர்த்த தகை மாண் காடியின்-நல்ல இளம் பிஞ்சுகளைப் பிளந்து போட்ட உண்ணும் தகுதியால் மாண்புற்ற ஊறுகாயினோடு, வகை படப் பெறுகுவிர்-வகை வகையாகப் பெறு: - வீர்கள். - - ... •