பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. நீர்ப் பாயல் துறைமுகப் பட்டினம்

பல்லவர் காலம் தொட்டு மாமல்லபுரம் என வழங்கப் பெறும் துறைமுகப் பட்டினம், திரையன் ஆண்டிருந்த சங்க. காலத்தில் நீர்ப்பாயல் என அழைக்கப்பட்டது. அந்தனர் குடியிருப்பில் அறுசுவை விருந்துண்டு விடை கொள்ளும் பெரும்பாணன், அடுத்துப் புக இருப்பது, அந்தணர் குடியிருப்பிற்கு அணித்தாக இருக்கும் அத்துறைமுகப் பட்டினமே யாதலின், அதன் வணிகவளம், அதன்கண் வாழ் மக்கள் செல்வ வளம், பெரும்பாணன் ஆங்குப் பெறலாகும். சிறப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து விளக்கத் தொடங் கினார். -

நீர்ப்பாயல் தறை, அந்தணர் குடியிருப்பிற்கு நனிமிக அண்மையில் இருக்கும். அங்கு வந்து நிற்கும் மரக்கலங்களின் கூம்புகள் அந்தணர் குடியிருப்பிலிருந்து நோக்கினாலும் நன்கு புலப்படும். மேலும் அத்துறை நீரில் மூழ்கி மீன் கவரும் பறவைகள், அந்தணர் குடியிருப்பில் அந்தணர் நட்டு வைத்திருக்கும் வேள்விக் கம்பத்தில் அமர்ந்தே இரையுண்ணும். அத்துணை அண்மையது அது.

அப்பட்டினத்து வணிகர் செல்வச் செருக்கில்மிகுந்தவர்; அவர் வீட்டு மகளிர் புனலாடச் செல்லும்போது, தாம் அணிந்திருக்கும் மகரக்குழை முதலாம் பொன் அணிகள் விலை மிகுந்தவை; அவற்றை லீட்டிலேயே கழற்றிக் காப்பிட்டுச் செல்லவேண்டும் என்ற கருத்தின்றி அவற்றை