பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ா. கோவிந்தனார். 137

பொன்னும், நவம ணியும், கங்கை பாயும் வங்க நாடு, தரும் பல்வேறு வளங்களும், அக் கலங்களிலிருந்து இறக்கப்பட்டு வரிசைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும். -

தமிழகத்துப் பொருள்களை அவை விரும்பும் வெளிநாடு களுக்குக் கொண்டு சென்று விற்றும், தமிழகத்திற்குத் தேவைப்படும் பொருள்களை அவை கிடைக்கும் வெளிநாடு களிலிருந்து வாங்கி வந்தும் தமிழகத்தின் செல்வ வளம் பெருக்கும் வணிகப் பெருமக்கள் தொழிலாற்றும் வணிக விதிகள் எண்ணிலவாகும். கடற்கரைப் பகுதியாதலின் வீதிகளில் பெருமணலே பரந்து கிடக்கும் என்றாலும், இரு மருங்கிலும் மாடமாளிகைகள் வானளாவும் உயர்வுடைய வாகக் கட்டப்பட்டிருக்கும். வாணிகம் கருதி வந்து குவிந்திருக்கும் பொருட்களைச் சேமித்து வைத்திருக்கும் மிக உயர்ந்த பண்டக சாலைகளும், அவற்றைக் காத்து நிற்கும் காவல் வீரர்களையும் ஆங்கே காணலாம். அடுத்து அவ்வணிகப் பெருமக்களும், ஆங்குப் பணி புரிவாரும் வாழும் இல்லங்களைக் காணலாம். . . . .

அது வணிகப் பேரூர், உழு தொழிலுக்கு இடமில்லை. ஆதலாலும் ஏர்களிலிருந்து பூட்டி விடப்படும் உழுகாளை களும், கன்றுஈன்ற பசுக்களும் வயிறாரத் தின்பதற்கான புல், மணல் நிறைந்த கடற்கரைப் பகுதியில் கிடைக்காது ஆதலாலும், உழு காளைகளையும், கன்று ஈன்ற பசுக்களை யும், ஆங்குக் காணல் இயலாது. ஆனால், ஆங்கு வாழ்வார். தம் உடைமைகளின் காவல் கருதி வளர்க்கப்படும் நாய் களையும், உணவு கருதி வளர்க்கப்படும். ஆட்டுக்கிடாய் களையும் காணலாம். வருவார்க்கு எப்போதும் வழங்கிக் கொண்டே இருப்பதற்கேற்ற பெருஞ்சோற்று வளம் மிக்கவை, வணிகரின் அவ்வில்லங்கள். - - -