பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

கொடும்பூண் மகளிர் . . . -

கொன்றை மென்சினைப்பணி, தவழ்பவைபோல் பைங்காழ் அல்குல் நுண்துகில் நுடங்க மால்வரைச் சிலம்பின் மகிழ்சிறந்து ஆலும், பிலிமஞ்ஞையின் இயலிக் கால - தமனியப் பொற்சிலம்பு ஒலிப்பு உயர்நிலை வான்தோய் மாடத்து வரிப்பந்து அசைஇக் கைபுனை குறுந்தொடி தத்தப் பையய முத்துவார் மணல்பொற் கழங்கு ஆடும்”

- (327–335)

உரை : .

கொடும்பூண் மகளிர்-வடித்துச் செய்யப்பட்ட பொன்னணிகல்ன் அணிந்த மகளிர், கொன்றை மென் சினை-கொன்றையின் மெல்லிய பூங்கொம்புகளில், பனி தவழ்பவையோல்-பனிப்படலம் படிந்திருப்பது போல், பைங்காழ் அல்குல் நுண்துகில் நுடங்க-பசிய மணிவடங்கள் அணிந்த அல்குவில் மெல்லிய ஆடை அசைய, மால்வரைச் சிலம்பின்-பெரிய பக்க மலை களில், மகிழ் சிறந்து ஆலும்-மகிழ்ச்சி மிகுந்து ஆரவாரிக்கும், பீவி மஞ்ஞையின் இயலி-தோகை யோடு கூடிய மயில்போல் உலாவி, காலதமனியப் பொற் சிலம்பு ஒலிப்ப-கால்களில் உள்ள செம்பொன்னால் ஆனிசிலம்பு ஒலிக்க, உயர்நிலைவான் தோய் மாடத்துஉயர்ந்த நிலையுடையதாகிய வானத்தைத் தீண்டும் மாடத்தின் கண், வரிப்பந்து அசைஇ-வரிந்து செய்யப் பட்ட பந்துஆடி இளைத்து, கைபுனை குறுந்தொடி தத்தப் பைப்பய-கையில் அணிந்த மெல்லிய தொடி அசையும்படி மெல்ல மெல்ல, முத்துவார் மணல்முத்துப் போன்ற பரப்பிய மணலில், பொற்கழங்கு ஆடும்-பொன்னால் செய்த கழங்கு கொண்டு விளையாடும். . . . . . . . . . . . . . . .