பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 பெரும்பாணாற்றுப்படை வினக்கவுரை

மாதலின், கடை வாயிலில் மலர் தூவப்பட்டிருக்கும். கள்ளுக் கடையின் ஒரு பகுதியிலேயே கள் காய்ச்சவும் படும். கள் காய்ச்சும் தொழிலை மகளிரும் கற்றிருப்பர், அம் மகளிர்கள் காய்ச்சிய கலங்களைக் கழுவிச் சாய்க்கும் கழிநீர், பல கால்களாக ஓடி, பன்றிக் கூட்டம் தம் குட்டிகளோடு வீழ்ந்து புரளுமளவு அகன்ற பெரும் பள்ளத்தில் வீழ்ந்து நிரப்பும், - . . . • ,

கள் காய்ச்சிய கலங்களைக் கழுவி வார்த்த நீர் ஒடித் தேங்கும், சேற்றுக் குழிகளில், பன்றிக் கூட்டம் வீழ்ந்து கிடக்கும் எனக் கூறுவதன் முகத்தான், கள்ளுக் கடையின் பெருமையினை எடுத்துக் காட்டிய புலவர். பன்றிக் கறியின் பெருமையினைத் தொடர்ந்தார். - -

அவர்கள், பன்றிக் கறி உண்பவர்தான் எனினும், பன்றி களுள் நல்லதாகத் தேர்ந்தெடுக்கும் பன்றியின் கறியை மட்டுமே. உண்பார்கள். உடலெல்லாம் மாசுபடச், சேற்றில் விழ்ந்து கிடக்கும் பன்றியின் கறியையோ, கிடைப்பன எல்லாம் தின்று வளரும் பன்றியின் கறியையோ, குட்டி பல ஈனும் பெண் பன்றியோடு கூடி உரம் இழந்து போகும் பன்றியின் கறியையோ உண்ண மாட்டார்கள். உண்பதற் கென்றே ஆண் பன்றி ஒன்றைத் தேர்ந்து, அதைப், பிற பன்றிகளோடு சேர்த்து வளர்த்தால், அவை போலவே சேற்றில் புரண்டு வந்து சேரும், கிடைப்பன எல்லாம் தின்று வந்து சேரும், பெண் பன்றியோடு இணைந்து உரம் இழந்து போகும் என்பதால், அதை ஏறமாட்டா ஆழம் மிக்க குழியில் வைத்து, நெல்லை இடித்து எடுத்த மாவை மட்டுமே உணவாக அளித்து வளர்ப்பர். உண்பர் வருவோர்க்கும் படைப்பர் பெரும்பான அப் பட்டினத்தில் தங்க நேர்ந் தால், அவர் அளிக்கும் பன்றிக் கறியும், களிப்பு மிக அளிக்கும் கள்ளும் உண்டு செல்வாயாக என்றார்.