பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 143

பட்டினம் மருங்கின் அசையின், முட்டில். பைங்கொடி நுடங்கும் பலர் புகு வாயில் செம்பூத் தூய செதுக்குடை முன்றில் கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய வார்ந்துகு சின்னிர் வழிந்த குழம்பின் ஈர்ஞ் சேறு ஆடிய இரும்பல் குட்டிப் பன் மயிர்ப்பினவொடு பாயம் போகாது நெல் மா வல்சி தீற்றிப் பன்னாள் குழி கிறுத்து ஓம்பிய குறுந்தாள் ஏற்றைக் சொழுகிணத் தடியொடு கூர்நறாப் பெருகுவீர்”

(336–345)

முட்டில்-கள் வழங்குவதில் முட்டுப்பாடு இல்லாத, பைங்கொடி நுடங்கும்-புதிய கொடிகள் பறக்கும், பலர் புகு வாயில்-கள் உண்பார்பலரும் புகும் வாயிலில், செம்பூத்துாய-சிவந்த மலர்கள் தூவப்பட்ட, செதுக் குடை முன்றில்-புல் போகச் ச்ெதுக்கப்பட்ட முற்றத் தில், கள் அடு மகளிர்-கள். காய்ச்சும் மகளிர், வள்ளம் நுடக்கிய வார்த்து உகு சில் நீர் வழிந்த குழம்பின்கலங்களைக் கழுவிக் களைத்துச் சிந்திய சிலநீர் சேர்ந்து ஒடி நிறைந்து வழிந்த குழம்பில், சர்ஞ்சேறு ஆடியஈரச் சேற்றில் வீழ்ந்து புரண்ட, இரும்பல் குட்டி-கரிய பல குட்டிகளை ஈன்ற. பன் மயிர்ப் பிணவொடு-உட லெல்லாம் மயிரால் நிறைந்த பெண் பன்றியோடு, பாயம் போதாது-உபுணர்ச்சி விரும்பிக் கூடாமல், நெல் மா வல்சி தீ ற்றி-நெல் அரிசி மர்வாகிய உணவைத் தின்ன்ப் பண்ணி, பல் நாள் குழி நிறுத்து ஓம்பிய குறுந்: தாள் ஏற்றை-ப்ல நாள் வரை, குழியிலே வைத்துக் காத்து வளர்த்த குறுகிய கால்களை உடைய ஆண் பன்றியின், கொழு நினத் தடியொடு-கொழுத்ததறித்