பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

துண்டுகளோடு, கூர் நறாப் பெறுகுவீர்-களிப்பு மிக்க கள்ளும் பெறுவீர்கள். - -

11:4 கலங்கரை விளக்கு

நீர்ப்பாயல் துறையின் கலங்கரை விளக்கம், நகரப் பெரு. மாளிகைகளிடையே கட்டப் பட்ாது, கலங்களின் கண்ணில் நன்கு படுதற் பொருட்டு, நகர எல்லையில் கட்டப்பட்டிருப் பினும், அது, அந் நகரத்துக் கட்டிடங்கள் எல்லாவற்றைக் காட்டிலும் உயரமானது ஆதலின், ஆங்குச் செல்வார் கண் களுக்கு அது தப்புவது. இல்லை. அதனால், நீர்ப்பாயல் நீங்கிக் கச்சி நோக்கிப் புறப்பட்ட பெரும்பாணனுக்குக் கச்சி பற்றிக் கூறுவதன் முன்னர்க், கலங்கரை விளக்கம் பற்றிக் கூறத் தொடங்கினார். -

கலங்கள், நடுக்கடவில், நெடுந் தொலைவில் வரும் போதே அடையாளம் காட்டி அழைக்க வேண்டு மாதலின், களங்கரை விளக்கம் தனிமிக உயரமாகக் கட்டப்பட்டிருக்கும். அதன் உயர்வை நோக்குவார் அனைவரும், வானம் இடிந்து வீழ்ந்து விடாதபடி முட்டுக் கொடுத்து நாட்டி வைத்தி ருக்கும், மதலையோடு கூடிய கம்பமோ, வானத்தோடு முட்டி மோத உயர்ந்து நிற்கிறதோ என்றே ஐயுறுவர். அத்துணை உயரம் உடையது. அதன் உச்சியில் அமைக்கப்பட்டிருக்கும். விளக்கை, நாள்தோறும் இரவில் ஏற்றி வைக்க ஏறிச் செல்ல ஏணி பொருத்தப்பட்டிருக்கு மென்றாலும் அதன் மூலம் ஏறுவதும் அத்துணை எளிதன்று. ஒவ்வொரு நாளும் அரும்பாடு பட்டே ஏறுதல் இயலும். அத்தன்ை உயர மாக இருப்பதாலும், பெருங்காற்று வீசும் கடற்கரையில் இருப்பதாலும், மன்னல் நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாலும், அது, கல்லும் சாந்தும் கொண்டு கட்டப்பட்டிருக்கும். அதன் கூண்ரயும், கழிகளாலும், ஒலைகளாலும், வைக்கோலாலும் iேய்ப் படாமல், மாடியாகவே அமைக்கப்பட்டிருக்கும்,