பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. தண்டலை உழவர் தரும் விருந்து

கச்சியையும், தமிழகத்துப் பிற பெரு நகரங்களையும் இணைக்கும் பெரு வழிகள் பல இருந்தாலும், கச்சியையும், நீர்ப்பாயல் துறையையும் இணைக்கும் பெருவழி, மிகவும் சிறப்புடையதாகும். தொண்டை நாட்டின் தலை சிறந்த துறைமுகம் பட்டினமாகவும், சிறந்த கடற்பட்ை நிலைய மாகவும், நீர்ப்பாயல் இருந்தமையால், நாடாளும் அரசனும், அவன் நாற்படையும், வணிகப் பெருமக்களும், அப்பெரு வழியில் எப்போதும் வழங்கி வந்தமையால், அது, நன்கு ப்ேணப்பட்டு வந்தது. வழியின், இரு மருங்கிலும், தென்னந் தோப்புகளும், கமுகஞ் சோலைகளும், மாவும், பலாவும் மலிந்த பெருந் தோப்புகளும், வாழைத் தோட்டங்களும் நிறைந்து, வழி நெடுகப் பந்தர் இட்டாற்போல் நிழல் படர்ந் திருக்கும். நீர்ப்பாயல்துறை விடுத்துக் கச்சிக்குப் புறப்படும் பெரும்பாணனுக்கு, அப்பெரு வழியின் சிறப்பினையும், ஆங்குப் புசி தீரப் பெறலாம். காய்கனி வகைகளையும் எடுத் துரைக்கத் தொட்ங்கினார். , -

பெருவழி, கீழ்க்கடலை அடுத்துச் செல்வது. அதனால், - நிலம் மணல் கலந்து, வாழையும் தென்னையும், மாவும் பலா வும், போலும் மர வகைகளும், மஞ்சளும், ம்லர்ச் செடிகளும், வள்ளிக் கிழங்கும் வளமாக வளர்வதற்கு ஏற்புடையதாக இருக்கும். பருவ மழையால், நீர் வளத்தையும் குறைவரப் பெற்றிருக்கும். இவை அனைத்திற்கும் மேலாக, அவ்விரு வளங்களையும் துணை கொண்டு தொழிலாற்றிப் பயன்