பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 - பெரும்பாணாற்றுப்படை விள்க்கவுரை

அம்மனை வாழ் மக்கள், விருந்தோம்பி மகிழும் வேளான் குடி வந்தவர். விருந்தினர் யாரையேனும் கண்டுவிட்டால், அவர்களை அன்புடன் அழைத்துச் சென்று, தம்மிடம் உள்ளன எல்லாம் அளித்து அக மகிழ்வர். விருந்தினரை மனை முற்றத்தில் அமரச் செய்து விட்டு, ஒருவர் சென்று, பலாக்கனியொன்றை வெட்டிக் கொணர்ந்து, பிளந்து சுளை விரித்து வைப்பர். ஒருவர் தென்னையில் ஏறிக் காய்களைப் பறித்துக் கொணர்ந்து சீவி இளநீர் பருக வேண்டுவர். ஒருவர் வாழைத் தோட்டத்துள் புகுந்து, முழுத் தாரைக் . கொணர்ந்து, புகையூட்ட வ்ேண்டாது குலையிலேயே கனிந்: திருக்கும் பழங்களைத் தோல் உரித்து வைப்பர். ஒருவர். ஒடிப், பனை மரத்தில் ஏறிக் கொணர்ந்த பனங்காய்களை வெட்டி நூங்கெடுத்து வைப்பர்.

சக்கை குறைந்து, சுளையே மிகுந்திருக்கும் இப்பலாப் பழத்தின் பெரும் பாரத்தைத் தாங்கி, அக்கிளை, எப்படித் தான் ஒடிந்து போகாம்ல் நிற்கிறதோ என வியந்தவாறே, சுளையை வாயில் இட்டால் அதன் சுவை,மேலும் வியப்பூட்டு வதாய் இருக்கும். தோல் அற்றுப் போக, வெண்ணிறம் காட்டி, வளைந்து கிடக்கும் வாழைக் கனிகள், பிடியானை யின் வாயின் இரு மருங்கிலும் சிறிதே வெளிப்பட்டுத் தோன்றும் வெள்ளிய கொம்புகளை வடிவாலும், வண்ணத் தாலும் ஒத்திருப்பது கண்டு அடையும் மகிழ்ச்சியினும், உண்டவழிச் சுவை அளிக்கும் மகிழ்ச்சி, குறைவுடையதாக இராது. தென்னையின் முற்றா இளங்காயின் சுவை மிகு நீரைக் குடிக்கக் குடிக்க, அத்துணைக் குட்டையான மரம், இவ்வளவு நீர்கொண்ட காய்களை எவ்வாறுதான் காய்த்துத் தாங்குகிறதோ என்ற வியப்பே மேலிடும். பனம் துங்கு பெரிய பாராட்டைப் பெற்று விடும். இவை மட்டுமன்று; அவர் கொடுக்கக் கொடுக்க நிறைய உண்பதால், அளவிற்கு - மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சாம் என்ப்தற்கேற்ப, அவற்றின் பால் வெறுப்புண்டாகி விடவும் கூடும்; வயிறு புடைக்க