பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் - 149

உண்டதால் வயிறு வலிக்கவும் கூடும்; அதைக் குறிப்பால் உணர்ந்து கொள்ளும் அவ்வீட்டார், விரைந்து சென்று இஞ்சிக் கிழங்கை அகழ்ந்து கொணர்ந்து தருவர். அதைத் தின்று நோய் தீர்த்தபின்னரே, விருந்தினர்க்குவிடைதருவர்.

தண்டலை உழவர் மனையில் விருந்துண்டு, அவரிடம் விடை கொண்டு கச்சி நோக்கிச் செல்வார்க்கு இடைவழியில், கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சிகளுக்குக் குறைவிராது: அது கோடைகாலம்: அக்காலத்து மாலைப் பொழுதில் கருமேகம் கால் கொண்டு பெருமழை கொட்டும். மழை பெய்து ஒயும்வரை கர்ப்பான இடத்தில் ஒதுங்கியிருந்து, அது நின்ற பிறகு, மீண்டும் வழி மேற்கொண்டு செல்லும் நிலையில் இடைவழியில் அவர் காணும் ஒரு காட்சி, கருமேகம் மீண்டும் கால் கொண்டு விட்டதோ என்று எண்ணி நடுங்கச் செய்துவிடும். அந்நடுக்கத்தோடு, அக்காட்சியை மெல்ல மெல்ல அணுகி நோக்க, அது, மேகம், கால் கொண்டது அன்று: அஃது ஒரு கமுகந்தோட்டம், கமுசு. மர்த்தின் பருத்து நீண்ட தண்டுகளே, கருமேகம் கால் கொண்டது போல் காட்சி அளித்தது என அறிந்து அச்சம் நீங்கி, மேலே செல்லத் தொடங்கியதும், மகிழ்ச்சியூட்டும். காட்சி ஒன்றும், ஆங்கே காத்திருக்கும். - -

தமுகந்தோட்டத்தை அடுத்திருக்கும் தென்னந்தோப்பில், வழிப்போவார் சிலர், மரத்தடியில் கல்லடுப்பு மூட்டிச் சமைத்துக் கொண்டிருப்பர். அவர்களுக்கோ கடும்பசி, சமையல் முடிந்து உணவு படைக்கும் வரை, பசிதாங்க மாட்டாது துயருற்றுக் கிடப்பர். அந்நிலையில், முற்றிய தேங்காய் ஒன்று, காம்பற்று அடுப்பருகே விழும். அது விழும் அதிர்ச்சியில்,அக்கல்லடுப்பும், அதன் மீது உள்ள சோற்றுப் பானையும் சிறிதே நடுங்கவும் செய்யும். அதிர்ச்சியால் சோற்றுப் பானை உருண்டு வீழ்ந்து உடைந்து விடுமோ என அவரும் அஞ்சி நடுங்கிப்போவர். அது சிறிது பொழுதே, காய்