பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

மரங்களில் ஏறிப்படர்ந்திருக்கும் மாதவிக் கொடியிலிருத்து வேனில் வெப்பம் தாங்க் மாட்டாது வாடிப் போன மலர்கள் உதிர்ந்து கொண்டிருக்கும். அவ்வாறு உதிரும் மலர்கள், மரத்தடியில், வட்டம், வட்டமாக நீர் தேங்கி நிற்கும் சிறு சிறு பள்ளங்களில் வீழ்ந்து மிதக்கும் அக் காட்சி, அக் காஞ்சிமா நகரத்து வீதிகளில், அப்ப வணிகர்: கரிய சட்டியில் காய்ச்சிய பாகு கலந்து பிசைந்த மாவை, வட்டம் வட்டமாகச் சுற்றி வைத்த, வெண்ணுரல் போலும் வடிவில் பிழிந்து எடுக்கும் இடியாப்பம், பால் நிறைந்த வட்டத் தட்டில் மிதக்க விட்டிருப்பதை நினைவூட்டுவதாய் இருக்கும். - . . . . - -

அழகிய அந்தச் சோலையுள், காதலனும் காதலியுமாக: கணவனும் மனைவியுமாக, ஆடவரும் மகளிரும் திரண்டிருப் பர். ஆங்கு உலா வரும் அம் மகளிர் அழ்கில் மிக்கவர்; அவர் துதல் மூன்றாம் பிறைத் திங்கள் போல் ஒளிவீசும். படம் விரித்த பாம்பு போலும் வடிவுடைய, மகரவாய் என்ற அணியைத் தலையில் அணிந்திருக்கும் நிலையில், அவர் முகத்தை நோக்கினால், அரவு கவ்விய இளம்பிறைத் திங்கள் போல் தோன்றும். அவர் கருவிழிகளில் அன்பு கனியும், இனிக்கும் தேனை உருமாற்றி, இம்மகளிரின் கண்ணாகப் பொறுத்தி விட்டனரோ என எண்ணி ஏங்குமளவு இன்பத் சுவை ஊட்டும். அத்தகைய அழகுமிக்க இளம் மகளிர் உடன் வர, மலர்க்சோல்ை புகும் ஆடவர், சோலைப் புது மணலில் அமர்ந்து, பாளை உள் அடங்க, சூல் கொண்ட கமுக மரத்தின் வயிறு போல் உடைத்திருக்கும் பச்சைக் குப்பிகளில், உடன் கொணர்ந்த கள்ளை உண்டு தீர்த்து, இன்ப விளையாடல் மேற்கொண்டிருப்பர். . . . .

சோலையிலும், சோலையை அடுத்து வ்ற்றாத சிற்றாறு பரப்பும் புது மணல் மீதும், கரை வளர் மரங்கள் சொரியும் பன்னிற மலர்கள் நிறைந்திருக்க, அடைவதற்கு அரியது, அடைந்தார்க்குப் பேரின்பம் பயப்பது என்ற பழம் பெருமை.