பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா.கோவிந்தனார் 155

வாய்ந்த துறக்க உலகம் என்றது. இதைத்தானோ என எண்ணுமளவு இன்பச் சூழல் மிகுந்த அச் சோலையிலும் அச் சோலையை அடுத்த ஆற்றுத் துறையிலும் உலக இன் பத்தில் ஆழ்ந்துபோகும் அவர்கள், ம்றுமை இன்பத்திற்கும் வழிவகுத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு வரப் பெற்றதும், சோலையின் நீங்கி, திருவெஃகா அடைவர். பள்ளி கொண். பெருமாளின் திருவருட் காட்சிக்காக, ஆங்குக் காத்திருப்பார் வரிசையில், தாமும் இடங் கொண்டு விடுவர். -

பெரும்பாண அவ்வாறு காத்திருப்பாரோடு நீயும் கலந்து கொள்வாயாக; திருக்கோயில் உள்ளே படம் விரித்து உயர்ந்த ஆயிரம் தலைகளைக் கொண்ட பாம்பனைமீது, கரிய திருமேனிப் பெருமாள் பள்ளி கொண்டிருப்பான். அக் காட்சி, கடந்து வந்த வழியில், காந்தள், விரிந்த கைபோலும் வடிவில், கொத்துக் கொத்தாய் ம்லர் ஈன்று காடென வளர்ந்திருக்கும் மலைச்சாரலில், அக் காந்தள் மலர்க் கிடையே, கரிய பெரிய ஆண் யானை படுத்துறங்கும் காட்சியை நினைவூட்டிப் பேரின்பம் தரும். அப்பெருமான் திருமுகக் காட்சி கிடைக்கும் வரை வாளா இராது, உன் கையில் இருக்கும் இனிய யாழை இயக்கி, அப் பெருமாள் புகழ் பாடிப் பரவுவாயாக! திரையன் புகழ் பாடுவதன் முன்னர்த் திருமால் புகழ் பாடினம் என்ற மன நிறைவு. உண்டாகும். - . . * *

நீடு குலைக் , ‘ காந்தள் அம்சிலம்பில் களிறு படிந்தாங்குப் பாம்பு அண்ைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண் வெயில் நுழைபு அறியாக்குயில் நுழைபொதும்பர்க் குறுங்கால் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப், பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூக் கார் அகல்கூவியர் பாகொடு பிடித்த இழைசூழ் வட்டம் பால்கலந்தவை போல்