பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

நிழல்தாழ் வார்மண்ல் நீர்முகத்து உறைப்பப், புனல் கால்கழி இய பொழில்தொறும், திரள்கால் சோலைக் கமுகின் சூல்வயிற்று அன்ன லேப் பைங்குடம் தொலைச்சி, நாளும் பெருமகிழ் இருக்கை மரீஇச், சிறுகோட்டுக் குழவித் திங்கள் கோள் நேர்ந்தாங்குச் சுறவுவாய் அம்ைத்த சுரும்புசூழ் சுடர்நுதல், நறவு பெயர்த்தமைத்த நல்எழில் மழைக்கண் மடவரல் ம்களிரொடு பகல் விளையாடிப், பெறற்கு அரும் தொல்சீர்த் துறக்கம் ஏய்க்கும் . பொய்யா மரபின் பூமலி பெருந்துறைச் செவ்வி கொள்பவரொடு அசைஇ, அவ்வயின், அருந்திறல் கடவுள் வாழ்த்திச் சிறிதுதும் கருங்கோட்டு இன்னியம் இயக்கினிர் கழிமின்’

  • . - - (371-392)

_6@ :

நீடுகுலைக் காந்தள் அம்சிலம்பில்-நீண்ட குலை களையுடைய காந்தள் வளர்ந்த அழகிய பக்க மலையில், களிறு படிந்தாங்கு-யானை படுத்திருந்தாற்போல, பாம்பு அணைப்பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்-பாம் பணைப் படுக்கையில் விரும்பித் துயில்கொண்டோ னுடைய திருவெஃகாவில், வெயில் நுழைபு அறியாஞாயிற்றின் கதிர் சிறிதும் நுழைவதும் அறியாத, குயில் நுழை பொதும்பர்-குயில்கள் நுழைந்து செல்லும் இள மரக்காவில், குறுங்கால் காஞ்சி. சுற்றிய-குறுகிய காலையுடைய காஞ்சி மரத்தைச் சுற்றிய, நெடுங் கொடிப் பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூ-நீண்ட கொடிகளையும், பசிய இலைகளையும் உடைய குருக் கத்தியின் பொலிவிழந்த புறத்திணையும் வரிகளையும் உடைய மலர்கள், கார் அகல்-கரிய சட்டியில், கூவியர் பாகொடு பிடித்த-அப்ப வாணிகர், பாகொடு கலந்து