பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. திரையன் ஆற்றிய கன்னிப் போர்

கச்சிப் பெரு நகரின் பெரும்ை, அதன் அமைப்பு நலன் ஆகியவற்றை விளங்க உரைத்த புலவர், அடுத்து, திரையன் நாளோலக்க நலம் பற்றிக் கூறுவதன் முன்னர், திரையன் இப்போது பெற்றிருக்கும் அரசப் பெருவாழ்வு பாரெல்லாம் போற்றும் பெருமை வாய்ந்ததாகவே இருப்பினும், அது, அவன் ஆற்றல் கொண்டு அவனே அமைத்துக் கொண்ட தாகாது, அவன் தாயத்தாரால் அமைக்கப் பெற்று, மகனுக்குத் தந்தை கொடுத்தது என்ற தாயமுறையால் வந்ததாக இருப்பின், அப் பெருவாழ்வு கண்டு, அவன் முன்னோரைப் பாராட்ட வேண்டுமே ஒழிய, திரையனைப் பாராட்டுவது முறையாகாது’ என்று பெரும்பாணன் எண்ண்வும் கூடும் என நினைத்தமையால், புகழ்மிகு பேரரசு அமைக்க, திரையன் மேற்கொள்ள வேண்டியிருந்த போர்க் கொடுமைகள் பற்றிய விளக்கத்தை மேற்கொண்டார்.

- கச்சி அரியணையில் அமர்ந்திருக்கும் திரையன், அதை எளிதில் கைக் கொண்டான் அல்லன். பகைவர் பலரை வென்று அழித்த பின்னரே, கச்சியுள் புக முடிந்தது. அவன் பகைவர் எந்நிலையிலும் உடன்பாடு காணமாட்டா முரண் பாடு மிக்கவர். அவர்களும் ஒருவர் அல்லர்: பலர்; அவர் பால் இருந்த படைகளோ ஒர் எண்ணிக்கைக்குள் அடங்க மாட்டாப் பெருமை வாய்ந்தவை. அத்துணைப் பெரும்: படைகளோடு, அவர்கள் அனைவரும், ஆறாச் சினம். கொண்டு ஒன்று கூடி வந்து எதிர்த்தனர். திரையன், தான்