பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 165

தனியன், அவர் பலர் என எண்ணி அஞ்சி விடாது, தன் ஆற்றல் முழுவதும் கொண்டு, பலநாள் ஒயாது போரிட்டான். இறுதியில், நாமும் நூறு பேர் உள்ளோம்! நம் பால் பதினெட்டு அக்ரோணி படைகளும் உள’ என்ற செருக்கால் போர் தொடுத்து வந்த துரியோதனாதியர் அனைவரும் மாண்டு மடிய, ஒரு நாள் இரு நாள் அல்ல, பதினெட்டு நாட்கள் கடும் போரிட்டு, அந்திச் செவ்வானத்தில் வளரும் பருவத்து வெண் பிறைத் திங்கள் இடையே இடம் பெறக் கார் முகில் கூட்டம் நகரும் காட்சியை நினைப்பூட்டும். வகையில், களத்தில் இறந்து வீழ்ந்தவர் உடல் கொட்டிய செங்குருதி வெள்ளத்தில், நீண்டு வளைந்த வெண்கோடு களையுடைய களிறுகளின் கரிய உடல்கள் மிதந்து செல்லு மாறு கடும் போரிட்டு வெற்றி கொண்ட பாண்டவர் ஐவர் . மேற்கொண்ட பாரதப் போரை நி ைன வூ ட் டு ம ள வு பேராற்றல் காட்டிப் போரிட்டுப் பகைவரை அறவே அழித்து வெற்றிக் கொண்டு விழாக் கொண்ட பின்னரே, திரையன் கச்சி அரியணையில் அமர முடிந்தது. -

பெரும்பான! அவ் வெற்றிப் பெருமிதம் மிதக்க, திரையன் இப்போது கச்சி அரியணையில் உள்ளான். ‘அவன் வெற்றித் திருமகனாதல் கூடும்; ஆனால் வருவார்க்கு வாரி வழங்கும் கொடைக் குணம் அவன்பால் குடிகொண் டிருக்குமோ!’ என்ற ஐயமே வேண்டாம். வெற்றிப் புகழில் . சிறந்து விளங்குவது போலவே, கொடை வளத்திலும் அவன் தலை சிறந்தவன். ஆகவே, பெரும் பாண் இனியும் தாமதி யாது, இன்னே அவன்பால் செல்வாயாக என்றார், -

“அவ்வாய் வளர்பிறை சூடிச் செவ்வாய் அந்தி வானத்து ஆடு மழை கடுப்ப வெண்கோட்டு இரும் பிணம் குருதி ஈர்ப்ப ஈரைம் பதின்மரும் பொருது களத்து அவியப் பேரமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந்தேர்