பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பெரும்ப்ானா ற்றுப்படை விளக்கவுரை .


ஆராச் செருவின் ஐவர் போல அடங்காத் தானையோடு உடன்றுமேல் வந்த ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்துக் கச்சியோனே.கைவண் தோன்றல்’ . . . .


(412-420),


உரை :


அவ்வாய் வளர்பிறை சூடி-அழகிய வடிவுடைய வளரும் பிறைத் திங்களைச் சூடி, செவ்வாய் அந்தி வானத்து-சிவந்த இடத்தை உடைய அந்திக் காலத்துச் செவ்வானத்தில், ஆடு மழை கடுப்ப-அசையும் கார் முகில்களை ஒப்ப, வெண்கோட்டு இரும்பிணம்வெள்ளிய கொம்புகளை உடைய யானைகளின் கரிய பிணத்தை, குருதி ஈர்ப்ப-குருதி வெள்ளம் இழுத்துச் செல்லுமாறு,ஈரைப் பதின்மரும் பொருது களத்து அவியதுரியோதனன் முதலான உடன் பிறந்தார் நூற்றுவரும் போரிட்டும் போர்க்களத்தே அழியும்படி, பேரமர்’ கடந்த-பெரிய போரை வென்ற, கொடுஞ்சி நெடுந் தேர்-கொடுஞ்சியை யுடைய தேர்ப்படையினையும், ஆராச் செருவின் ஐவர் போல-தொலையாப் பெரும் போரையும் உடைய தருமன் முதலான பாண்டவர் ஐவரைப் போல, அடங்காத்தானையோடு-எண்ணில் அடங்காத பன்டயோடு, உடன்று மேல் வந்த-சினம் கொண்டு போர் தொடுத்து வந்த, ஒன்னாத் தெவ்வர்தன் ஏவலுக்கு அடங்காத பகைவர்கள், உலைவிடத்து ஆர்த்து-அழிந்த போர்க்களத்து வெற்றிக் களிப்பு மிக ஆரவாரித்து, கைவண் தோன்றல்-கைகளால் வாரி வழங்கும் வள்ளல் தன்மையில் தலை சிறந் தோனாகிய தொண்டைமான் இளந்திரையன், கச்சியோனேகச்சிமா நகரின் கண் உள்ளான். ‘ - -