பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

மறுகரை செல்வதற்காக, இன்றியமையா ஒரு சில உடைமை களோடு திரண்டு வந்து கரையில் குழுமி நோக்கிய போது ஆங்குக் கங்கையைக் கடக்க உள்ளது ஒரே தோணி என அறிந்ததும், அதில் ஏறி அக்கரை அடைய ஒருவரை ஒருவர் முந்த விரையும் விரைவை அம் மன்ன்ர்களின் வேகத்தில் காணலாம். திரையனைக் காண்பதில் அம்மன்னர்களுக் அத்துணை ஆர்வம்; விரைவு. - f

திரையனைக் காணும் ஆர்வம் உந்த,ஆங்குக் காத்தி குக்கும் மன்னர்களிடையே புகுந்து “மன்னர் காள்! திரையன் பால், என்ன சிறப்பைக் கண்டு, இவ்வளவு திரளாக வந்து கூடியிருக்கிறீர்கள்? உங்கள் அனைவரையும் ஒரு சேர் ஈர்த்த அவன் அருந்திறல்கள்தாம் யாவிையோ?” என வினவினால் ‘தன்னை விரும்பி, தன்பால் அடைக்கல்ம் புகுந்து விட்டார்க்கு, ஒரு சிறு இடையூறுதானும் உண்டாகாவாறு காத்துப் புரக்கவல்ல அவன் அருளுடைமை கண்டு, அடைக் கலம் புக வந்துள்ளோம்” என்பர் சிலர். தன்னோடு பகை கொள்வாரை அறவே அழித்தொழிக்கும் அவ்ன் ஆற்றல் கண்டு அஞ்சி, பகை விடுத்து, பணிந்து வாழ வ்ந்துள்ளோம்” .

என்பர் சிலர். . . . . .

- அவர்கள் அவ்வாறு கூற, அடைந்தாரைக் காக்கும் பேரருளுடைமையும், பகைத்தாரைப் பாழ் செய்யும் பெரு வலியும், திரையன் பால் இருப்பதை எவ்வாறு கண்டு கொண்டீர்கள்’ என்று வினவினால், திரையனைப் பகைத்துக் கொள்ளாதார் நாட்டிற்கு அவனால், அழிவு உண்டாகாது. ஆனால் அந்நாட்டில் வளம் கொழிக்கும் என்று சொல்ல முடியாது; ஓரளவு வளந்தான் இருக்கும். ஆனால், திரையனோடு பகை கொள்ளாதிருப்பதோடு அமையாது, நட்பும் கொண்டவர் நாட்டில், வறுமை தலை காட்டாது; அழிவு இடம் பெறாது போவது மட்டுமன்று. ஆக்கம் பெருகி, வளம் கொழிக்கும்; செல்வம் செழிக்கும். செல்வச் செழிப்பு என்றால், வெறும் வயல் வளம் மட்டுமே