பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் . . . . 169

பெருகும் என்பதில்லை; பொன் வளமும் பெருகி நிற்கும்; அந்நாட்டு மரம், செடி, கொடிகள் பூவாகப் பூத்துக் குலுங் குவது போல், அந்நாட்டு மனைகளில் பொன் பூத்துப் பொலி வுறுவதைக் கண்ணாரக் கண்டு வந்துள்ளோம்” என்பர் இலர். . -

தன்னோடு நட்பு கொண்டவர் நாட்டில், உள்ள வளத் திற்கு ஊறு தேடாமையோடு நில்லாமல் அவ்வளம் ஒன்று பலவாகப் பெருகவும் துணை செய்யும் திரையன், தன்ன்ோடு பகை கொண்டவர் நாட்டில், உள்ள வளத்தை அழிப்பதோடு அமைதி கொள்ளாது, அந் நாட்டையே இல்லாமல் செய்யவும் வல்லன். அந்நாடு இருந்த வளங்களை இழந்து போவது மட்டு மன்று, அழிவுக்கும் உள்ளதாகும். தன்னோடு, பகை கொண்டு, தன் மேல் பேர் தொடுத்து வந்தாரைப், போர்க் களத்தில் வென்று அழிப்பதோடு, அமைதி உறுவா னல்லன். ஆங்கு அவரை அழித்த அவன், அவர் நாட்டுக் குள்ளும் புகுந்து நாடு எனும் பெயர் மறைந்து, காடு எனும் பெயர் பெற்றுப் போகுமாறு அந்நாட்டை அறவே அழித்து விடுவன். மனையற வாழ்வு மேற்கொண்டு மக்கள் வாழும் மாட மாளிகைகள் மட்டுமன்று; தமக்கென ஒரு வாழிடம் இல்லா வறியோர்களின் இருக்கையாம் ஊர்ப் பொதுவிடத்தையும் விட்டு வைப்பானல்லன். அம்மன்றமும் பாழ் பட்டுப் போக அந்நாட்டை அறவே அழித்து ஒழிப்பன். அவ்வாறு அவனால் அழிவுற்ற நாடுகளைக் கண் டு வந்துள்ளோம்” என்பர் சிலர். - - - -

அவர்கள், அவ்வாறு கூறக்கேட்டு, மலையில் பிறந்து,

உருண்டோடி வரும் அருவிகள், அம் மலையிலேயே இருந்து விடுவது இல்லை; இறுதியில்,கடலில் சென்று கலந்து விடுவது தவிர்த்து அவற்றிற்கு வேறு வழி இல்லை. அது போல்,

தங்கள் நிலைகுலைந்து போன இந்த அர்சர்களுக்குத் திரையனை தவிர்த்து வேறு புகலிடம் இல்லை. தன்னோடு