பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

கலந்துவிட உருண்டோடி வரும் அருவிகளை ஏற்றுக் கொள்வதல்லது ஏற்க மறுக்கும் இயல்பு கடலுக்கு இல்லை. அது போல் தன்பால் அடைக்கலம் புகும் அரசர்களை ஏற்று அவர்களுக்கு வாழ்வளிப்பதல்லது, வெறுத்து வெளியேற்றும் இயல்பு இளந்திரையனுக்கும் இல்லை என்ற உணர்வு எழி, மன்னர்களிடம் விடை கொண்டு, முற்றத்தைக் கடந்து சென்றால் அவன் அரண்மனைச் சிறப்பைக் காணலாம். -

முற்றத்தைக் கடந்து அரசவைநோக்கிச்செல்லும் போது,

இடை வழியில், அரண்மன்ை மாடத்து இறப்புகளில், தம் பெடைகள் இணைபிரியா திருக்கும் இன்ப உணர்வில் தம்மை மறந்து அறிதுயில் மேற் கொண்டிருக்கும் ஆண்புறாக் கூட்டம் அவ்வப்போது சிறகடித்து எழுந்து பறந்து செல் வதும், மீண்டும் வந்து இறப்புகளில் அமர்வதுமாகிய காட்சியைச் கண்ணுற்று புறாக்களின் அமைதிச் சூழ் நிலையைக் கெடுப்பது எதுவோ என எண்ணி நிற்பார் காது களில், கொல்லன் உலைக்களத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பைப் பட்டடை மீது வைத்து, பெரிய சம்மட்டி கொண்டு ஓங்கி அடிக்குந்தொறும் எழும் ஒலி விழவே, அவ் வொலி கேட்டே, அப் புறாக் கூட்டம் அந்நிலைக்கு ஆளாக் கப்படுகிறது என அறிந்து வருந்தி, அவற்றின் நிலைக்கு. இரங்கி, ஆங்குச் சிறிது இருந்து, பின்னர், அவ்வொலி எழுந்தவிடம் நோக்கிச் சென்று பார்த்தால், ஆங்கே, கொல்லன், போர்க்களிறுகளின் நீண்ட வலிய தந்தங்களுக்குப் பொருத்தப்படும் பூணாகிய கிம்புரிகளை உருவாக்கிக் கொண்டிருப்பதைக் காணலாம். அக் காட்சியால், திரையன், யானைப்படை முதலாம் நாற்படைகளைப் பேணிக்காக்கும் விழிப்புணர்வை உணர்ந்து மகிழ்ந்தவாறே, அரண்மனை யுள்ளே சென்றால், ஆங்கு, பொற்கட்டிகள் குவியல், குவியல்

களாகக் கொட்டிக் கிடப்பதைக் காணலாம்.