பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை * ,

உணர்ந்தமையினாலேயே, அவர்கள் அவ்வளவு பெருங் கூட்டமாக வந்து, நம்பிக்கையோடு அவன்முன் நிற்கின் றனர் என்பதை அறிந்து, அவன் பெருமையை எண்ணி, எண்ணி, வியந்து நிற்கும் நிலையில், அவனைச் சுற்றி அமர்ந் திருப்பாரைக் கண்ட வழி, அவன் பெருமை மேலும் உயர்ந்து - காணப்படும். - -

திரையனைச் சுற்றி, அமைச்சர்களுக்கு அமைய வேண்டிய, அறிவு, ஆற்றல், பண்பாடுகளை ஒரு சிறிதும் குறைவின்றிப் பெற்றிருக்கும் அமைச்சர்களின் ஒரு பெரிய கூட்டமே அமர்ந்திருக்கும். தன்னளவிலேயே தகைசான் றவன் என்ற பாராட்டினுக்கு உரியவனாகிய திரையன், ‘எனக்கு அறிவு புகட்ட, எனக்கு வழிகாட்ட ஒருவரும். தேவை இல்லை” என இறுமாந்துவிடாது, ஒளி விளக்கே ஆயினும், நன்றாய் விளங்கிடத் தூண்டுகோல் இன்றியம்ை யாதது என்ற உணர்வுட்ையனாய்ப், பெரியாரைத் துணை கோடலால் ஆம் நன்மையை உணர்ந்து, மதித்து, மதி வலம் மிக்க, நல்ல அமைச்சர்களைத் துணையாகக் கொண்டு அவர் நடுவண் அமர்ந்து நாடாண்டிருப்பன். அவை புகுந்து, அவனைக் காணும் பெரும்பாண அவனை, உன் நாவார, உன்நல் உளமாரப் பாராட்டுவாயாக, என்றார்.

‘நச்சிச் சென்றோர்க்கு ஏமம் ஆகிய அளியும் தேறலும், எளிய ஆகலின் மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட நயந்தோர் தேஎம் நன்பொன் பூப்ப நட்புக்கொளல் வேண்டி நயந்திசி னோரும் துப்புக்கொளல் வேண்டிய துணை இலோரும், கல்வீழ் அருவி, கடல்படர்ந்தாங்குப் பல்வேறு வகையின் பணிந்த மன்னர், இமையவர் உறையும் சிமையச் செவ்வரை - வெண்திரை கிழித்த விளங்குசுடர்நெடுங்கோட்டுப்