பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

கொள்ளுதலை விரும்பி அவனை விரும்பினவர்களும், துப்புக் கொளல் வேண்டிய துணை இலோரும்-அவன் ஆற்றலைத் துணைக் கொள்ளக் கருதிய வேறு ஓர் துணை இல்லாதவர்களும், கல்வீழ் அருவி கடல் படர்ந் தாங்கு-மலையிலிருந்து விழும் அருவி, கடலில் சென்று கலந்தாற் போல, பல்வேறு வகையில் பணிந்த மன்னர் -பல்வேறு காரணம் கருதிப் பணிந்த அரசர்கள். இமை யவர் உறையும் சிமையச் செவ்வரை இமையவர் வாழும் உச்சியையுடைய சிறந்த இமயமலையின் கண், வெண் திரை கிழித்த விளங்கு சுடர் நெடுங் கோட்டுவெள்ளிய அலைகளையுடைய நீர் பிளந்து பாய்வதால் விளங்கும் ஒளியையுடைய உயர்ந்த உச்சியிலிருந்து, பொன் கொழித்து இழி தரும்-பொன்னைக்கொழித்துக் கொண்டு ஓடி வரும், போக்கு அரும் கங்கை-கடத் தற்கு அரிய கங்கையாற்றில், பெருநீர்ப் போகும் இரியல் மாக்கள்-பரந்து அகன்ற அக் கங்கை நீரைக் கடந்து போகும் தங்கள் நாடு இழந்து கெட்ட மக்கள், ஒரு மரப்பாணியில் தூங்கி யாங்கு-கங்கையைக் கடக்க விடுகின்ற தோணி ஒன்றேயாதலால், தம்முறை வரும் வரை காத்திருந்தாற் போல, தொய்யா வெறுக்கை யோடு-எண்ணித் தொலையா பெரும் செல்வங் களோடு, துவன்றுபு. குழி இ-நெருக்கமாகத் திரண்டு, செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து-திரையனைக் காணும் காலம் எதிர் நோக்கிக் காத்திருக்கும், வளம் மிக்க முற்றத்தினையுடைய, பெருங்கை யானைக் கொடுந் தொடிப் படுக்கும் கருங்கைக் கொல்லன்நீண்ட கையினை உடைய யானையின் தந்தத்திற்கு வளைந்த பூனைச் செய்யும் வலிய கைகளையுடைய கொல்லன், இரும்பு விசைத்து எறிந்த கூடத்திண்ணிசை வெரீ இ-இரும்பால் ஆன சம்மட்டியை ஓங்கி அடித்த பட்டடையிலிருந்து எழுந்த பெரிய ஓசைக்கு அஞ்சி, மாடத்து இறையுறை புறவின் செங்கால் சேவல் இன்