பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் . 177

காத்தல் இயலாது என உணர்ந்து, பகைவர் போரைக் கைவிட்டு, பணிந்து திறை தர முன்வந்தால் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து, அரனுக்குரிய அரசர்களின் மணி முடி களைக்கைப்பற்றி அந்நாடாளும் அரசராக,அவ்வரணிலேயே முடி புனைந்து வெற்றிவிழா கொண்டாடி மகிழ்வர்.

அவ்வாறு பகை அரண்களையும், பகை நாடுகளையும் அழித்து, ஆங்குக் கைக்கொண்ட வளம் உண்டு வாழும் விரவாழ்வினர். அத்தகைய வீரவாழ்க்கை நடாத்துதற்கேற்ற வாள் படை முதலாம் நாற்படைகளைக் கொண்டவர். அப்படைகளை ஆளவல்ல உரம் பாய்ந்த உடல் அமைப்பும் வாய்க்கப் பெற்றவர். - -

பெரும்பாண! தொண்டையோரின் இப்புகழை யெல்லாம் விளங்க எடுத்துரைத்தபின்னர், அத்தொண்டை யோர் வழியில் வந்தவனே! போரில் வல்ல பெருவீரர்களும் புகழ்ந்து பாராட்டத்தக்க பெரு வீரனே! அவ்வீரத்தை எளி யோரை அழிக்கப் பயன்படுத்தாது, கொலை, களவு மேற். க்ொள்ளும் கொடியோரைக் கொடுமை செய்யப் பயன் படுத்தும் கொற்றவனே! அருட் செல்வம், பொருட் செல்வம் அறிவுச் செல்வம் வாய்க்கப் பெற்ற செல்வர்களும் மதித்துப் பாராட்ட அச்செல்வங்களைச் சிறக்கப் பெற்றவனே! போடி தொடுத்து எழுந்தால், அழியுதர் புறக் கொடை அயில்வேல் ஒச்சாமை போலும் அறவழிப் போர் செய்யும் சிறப்புடை யோனே! வரையாது வழங்கும் கொடை வளம் முதலாக அளவிறந்த புகழ்ச் செல்வம் உடையோய்! அவை அனைத் தையும் கூறிப் புகழ்வது என்னால் இயலாது. அவற்றுள் நான் அறிந்த சிலவே கூறிப் பாராட்டினேன். நீ நெடிது வாழ்வாயாக!” என்றெல்லாம் பாராட்டி வாழ்த்து CIJETffr56. . . .

குலத்தாலும், வேறு பல நலத்தாலும் சிறந்து விளங்கும் அவனை, அரசர்.அவை தோறும் சென்று பண் இசைத்துப்

பெரு-12 , . . . .