பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 பெரும்பாணாற்றுப்படை விள்க்கவுரை

தடக்கை-வலிய வாளையும், பெரிய கையையும்,

கொண்டி உண்டி-பகைவர் நாடுவென்று கொண்ட

கொள்ளைப் பொருளாகிய உணவினையும், உடைய, தொண்டையோர் மருக - தொண்டையோர் குடியில் வந்தவனே! மள்ளர் மள்ள-வீரர் போற்றும் வீரனே, மறவர் மற்வ- கொடியோர்க்குக் கொடியவனே, செல்வர் செல்வ - செல்வரும் மதிக்கும் செல்வச் சிறப்புடையவனே! செருமேம் படுந - போரில் மிக்க வனே, வெண் திரைப் பரப்பில் கடுஞ்சூர் கொன்ற - வெண்ணிற அலைவீசும் கடல் பரப்பில், கொடிய சூரனைக் கொன்ற, பைம்பூண் சேய் - புத்தொளிவீசும் அணிகலன் அணிந்த இளையோனாம் முருகனை, பயந்த மாமோட்டுத் துணங்கையும் செல்விக்கு - பெற் றெடுத்த பெருமைக்கு உரிய வயிற்றினை உடையவளும், துணங்கைக் கூத்தைக் கண்டு மகிழ்பவளுமான் அழகிய உமையம்மைக்கு, அணங்கு நொடித் தாங்கு - பேய்குறி கூறிப் பாராட்டினாற் போல், தண்டா ஈகை நின்பெரும்

பெயர் ஏத்தி வந்தேன் பெரும - குறையாத கொடை

வளம் மிக்க உன் பெரும் புகழுள் சிலவற்றைப்பாராட்டி வந்தேன் பெருமானே, வாழிய நெடிது-நீ நெடுங்காலம் வாழவாயாக, என-என்று கூறி, இடன் உடைப் பேரி,

யாழ் - இடப் பக்கத்தே தழுவிக் கிடக்கும் பேரியாழை,

முறையுளிக் கழிப்பி - முறைப்படி இயக்கி, கடன் அறி

மரபின்-யாழ்த் தெய்வத்திற்கு ஆற்ற வேண்டிய

14

கடமைகளை அறிந்த முறைப்படி, கை தொழு உப் பழிச்சி - கை கூப்பி வணங்கி நாவால் பாராட்டி, நின் நிலை தெரியா அளவை-நீ நிற்கும் நிலையினைத் தெரிந்து கொள்வதற்கு முன்பே, .

-3 திரையன் வழங்கும் விருந்து

பெரும்பாண நின் பேயாழ் இயக்கி இசையெழுப்பிப் ராட்டிநிற்கும் ஆந்நிலையே திரையன் உன்னை முழமை