பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 181

யாக அறிந்து கொள்வான் என்ற புலவர், அடுத்து, Tu7, வழங்கும் விருந்தின் பெருமை பற்றி விளக்கத் தொடங்கி :னார். . 3.

திரையன் புகழ் வாய்ந்த குடியில் வந்தவன். சிறந்த வீரன், பெரிய நாடாள்பவன். அதே நிலையில், இவற்றிற் கெல்லாம் நிலைக்களமாய உலகம் வாழ வேண்டும்; அது இல்லையேல் இவை இல்லை. இவற்றைக் காத்துக் கொள்ள வேண்டுமேல், முதலில் அதைக் காத்துக் கோடல் வேண்டும். அந்த உலக வாழ்வு,அதில் வாழும் உயர்ந்தோரைப் பொறுத் துள்ளது. உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு; அந்த உயர்ந்தோர் வாழ்ந்தால் உலகம் வாழும்; அவர் இல்லையேல் அதுவும் இல்லாகி விடும். ஆகவே, அதை வாழ வைக்க வேண்டு மேல் உயர்ந்தோர்களை வாழச் செய்தல் வேண்டும்: என்ற உலகியலையும் உணர்ந்திருந்தான், அதனால் பேரியாழ் இசைத்து, இசை வளம் காத்து வரும் பெரும் பாணனைக் காப்பது தன் கடம்ை என உணர்ந்திருந்தான்.

மேலும், இளமையும், இரும்பெனத் திரண்டுருண்ட உடலும், பெரிய அரச வாழ்வும் பெற்றிருந்தாலும், அவை அனைத்தும் ஒருநாள் அழியக் கூடியவை; அழியாது நிற்பது புகழ் ஒன்றே; அப்புகழ் தானும் பலவகையானும் வரும் என்றாலும், இல்லாதார்க்கு ஈதலால் வரும் புகழே ஈடு இணையற்றது என்பதையும் உணர்ந்திருந்தான். அதனால் பெரும்பாண உம் போலும் இரவலர்கள்ை அரசவையில் காணுவதன் மூலம், அவ்வுணர்வு வரப் பெற்றதும் அரசவைப் பணிகளை மறந்து விடுவர்ன். உன்னை அருகில் அழைத்து அணைத்துக் கொள்வான். . .

பலநாள் உணவின்றித் துன்புறும் பசிக் கொடுமையோ, உடல் உறுப்புகளில் அணியேதும் இல்லாமையோ, ஒருவன் வறுமையுற்றிருப்பதைக் காட்டி விடாது. ஒருவர் உடுச்