பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 . பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

அரிசெத்து உணங்கிய பெருஞ் செந் நெல்லின் தெரிகொள் அரிசித் திரள் நெடும் புழுக்கல் அருங்கடித் தீஞ்சுவை அமுதொடு பிறவும் விருப்புடை மரபின் காப்புடை அடிசில் மீன்பூத்தன்ன வான்கல்ம் பரப்பி மகமுறை மகமுறை நோக்கி ழுகன் அமர்ந்து ஆனா விருப்பின் தான் கின்று ஊட்டி’ . . . . . “ - (464–479)

.D :

அந்நிலை-அரசவையில் நீ நின்ற அந்த நிலையைக் கண்டதும், நாவலம் தண்பொழில்-நாவல் மரத்தால் பெயர் பெற்று சம்புத்தீவு என அழைக்கப்படும் குளிர்ந்த உலகம். வீவின்று விளங்க-கேடின்றி விளங்கும்படி, நில்லா உலக்த்து நிலைமை தூக்கி- நிலையாமையை யுடைய உலகத்தில், நிலைபேறு உடையது, எது என ஆராய்ந்து அது புகழே என அறிந்து, அந்நிலை அணுக வேண்டி-சேய்மைக் கண் நிற்கும் உன் நிலை தனக்கு அணித்தாகுமாறு உன்னை அருகில் அழைத்து, தின் அரைப் பாசி அன்ன சிதர்வை நீக்கி-உன் அரையில் கிடந்த, வேலம் பாசி வேர் போன்ற, நைந்த கந்தல் ஆடையை அகற்றி, ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம்- . பால் ஆவியை ஒத்த, ஒளிவிடும் நூலால் நெய்யப்பட்ட ஆடையை, இரும்பே ரொக்கலொடு ஒருங்கு உடல் உடீஇ-உன் பெரிய சுற்றத்தோடே, உடலுக்கு ஏற்ப உடுக்கப்பண்ணி, கொடுவாள். கதுவிய-வளைந்த அரிவாள் ஏந்திய, வடுவாழ் நோன்கை-வடு பொருந்திய வலிய கைகளை உடைய, வ்ல்லோன் அட்ட-அடுதல் தொழிலில் வல்லவன் சமைத்த, பல்லூன் கொழுங்குறை -பல வகைக் கறிகளிலும் பொறுக்கிய கொழுத்த கறியும், அரிசெத்து உணங்கிய-அரிதாள். நீர் வற்றும்