பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

பகைவர் பணிந்து திறைதர முன்வரினும் அதை ஏற்றுக் கொள்ள எண்ணாராய், அவரை அழித்து அவர் பொருள் அனைத்தையும் கைப்பற்றி உண்ணும் ஆற்றல் வாய்ந்தவர்.

பகைவர், கடிமதில் எறிந்து குடுமிகொள்ளும் வென்றியல்வது, வினையுடம் படினும், ! ஒன்றல் செல்லா, உரவுவாள் தடக்கைக் கொண்டி யுண்டித் தொண்டையோர் மருக’

-பெரும் பாண்-450-54

தன் பாட்டுடைத் தலைவன். திரையன் வரலாறாகக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறுவன இத்தனையவே.

திரையன் வரலாறு குறித்துப் பல்வேறு கருத்துக்களைக் கூறுவர் ஆராய்ச்சியாளர். “நாகப்பட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகத்தே சென்று நாக கன்னியைப் புணர்ந்த காலத்து, அவள் யான் பெற்ற புதல்வனை என் செய்வேன் என்ற பொழுது, தொண்டையையே அடையாள மாகக் கட்டிக் கடலிலேவிட, அவன் வ்ந்து கரையேறின், அவற்கு யான் அரசவுரிமையை எய்துவித்து நாடாட்சி கொடுப்பன் என்று அவன் கூற, அவளும் புதல்வனை அங்கனம் வரவிடத் திரை தருதலின் திரையன் என்று பெயர் பெற்றான்” என நச்சினார்க்கினியர் கூறும் செய்திகளை ஏற்றுக் கொண்டு, அச் சோழன் கிள்ளி வளவனாவன், நாககன்னி பீலிவளையாவள் என்று கொள்வர் சிலர்.

பல்லவன், அசுவத்தாமனுக்கும், மதனி என்ற அரமகள் o ஒருத்திக்கும் பிறந்தவனாவன்; அசுவத்தாமன் துரோணரின் மகன், துரோணர், கங்கை, நீரிற் பிறந்தவளாய க்ருத்ாசி’ என்ற நீரரமகளுக்கும், பாரத்வாஜ முனிவருக்கும் பிறந்தவர். இதனால், பல்லவர், திரைதரு மகளிர் மரபினர்ாதல் தெளி வாம்; இப் பல்லவரைக் குறிக்க வழங்கும் தொண்டையர் என்ற பெயரின்கண் வரும் தொண்டை என்ற சொல்.