பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

- துரோணர் என்ற சொல்லின் மருஉ முடிபாம் என்று கூறித் திரையன் வரலாறு குறித்து நச்சினார்க்கினியர் கூறியதை மறுத்து வேறு கூறுவர் சிலர். ‘ • - -

தொல்காப்பிய மரபியலில் 83-ஆம் நூற்பாவின் உரையிற் பேராசிரியர் மேன் பெறு மரபின் ஏனோர் எனப் படுவார் அரசுப்ெறுமரபிற் குறுநில மன்னர் எனக் கொள்க: அவை பெரும் பாண்ாற்றுள்ளும் பிறவற்றுள்ளும் காணப் படும்” என எழுதியுள்ளமையால் தொண்டையர் நம் பண்டை மரபினர் எனக் கொள்ளலாம்.

பெரும்பாணாற்றுப்படைத் தலைவனாகிய திரையன் மன்னன், வீரன், வள்ளல் என்னும் சிறப்புக்கள் மட்டுமன்றி, பாடல் இயற்றும் திறன் பெற்ற காவல பாவலனாகவும் திகழ்ந்தான். அவன் பாடிய பாடல்கள் நற்றிணையில் மூன்றும், புறநானூற்றில் ஒன்றும் (புறம் 183) இடம் பெற்றுள்ளன. -