பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

 ..

-

1. புலவர் பண்பாடு

  • பண்புடையார் பட்டு உண்டு உலகம்” என்றார் வள்ளுவர். (குறள்-996) தமக்கென முயலா நேர்ன்தாள்’ பிறர்க்கென முயலுநர் உண்மையான் உண்டால் அம்ம! இவ்வுலகம்” என்றான் பாண்டி நாடாண்ட பாவல்ல காவலன் ஒருவன். (புறம்-182) அத்தகைய பண்பாடறிந்த பெரியார் பலர் பண்டு வாழ்ந்திருந்தமையால் நம் பைத்தமிழ் நாடு இன்றும் பெருமை குன்றாமல் நின்று வாழ்கிறது. அப் பண்பாட்டு நெறியைப் போற்றி வளர்த்தவர்கள் தம் பைத்’ தமிழ்ப் புலவர்கள். அத்தகைய புலவர்களுள் ஒருவர்பால் கண்ட பண்பாடு இது: . - -

வெள்ளை நூலை விரித்து வைத்தாற்போல் நரைத்து முதிர்ந்த தலை, கையிற் கொண்ட கோலே கர்லாக, அடி மேல் அடியிட்டுப் பையப் பைய நடக்கும் தளர்ச்சி, மன்ை யின் முன்புறத்தையும் அறிந்து செல்லமாட்டாதபடி மாசடைந்து பார்வை இழந்த கண்கள். உடலும் உள்ளமும் தளர்ந்து போகவும் உயிர் போகாமை கண்டு, இவ்வளவு