பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

உண்பொருள் எதுவும் இன்மையால் வீட்டை மறந்து வெளியிடங்களிலேயே அலைந்து திரிவதால் மயிர் உதிர்ந்து காய்ந்து போன தலை, ஒரோவொருகால் வீட்டிற்கு வருங் கால் கூழும் சோறும் வேண்டிக் கூப்பாடு போடும் ஒயா அழுகை. அழுகை ஓய்ந்து அறைதனுள் அடுக்கிவைத்திருக்கும். கலங்களை ஒவ்வொன்றாகத் திறந்து நோக்கி, எதிலும் எதுவும் இன்மை கண்டு கலங்கி நீர் சொரியும் கண்கள். தன் அழுகையை அடக்க வேண்டி, புலி புலி என அச்சங்காட் டியும், அம்புலி அழைத்து அன்பு சாட்டியும் அழுகை ஒயா தாக, மனம் நொந்து மைந்த வருந்தும் உன் முகத்தைத் தந்தை வந்தால் அவர்க்குக் காட்டு” என்று கூறி வெறுக் கினும் தாய் முகமே நோக்கும் நோய் நோக்கு. பொன்போற் புதல்வன் எனப் போற்றத் தகும் புதல்வன் நிலை இது.

இல் உணாத் துறத்தலின் இல் மறந்து உறையும் புல் உளைக்குடுமிப் புதல்வன் பன்மாண் பால்இல் வறுமுல்ை சுவைத்தனன் பெறாஅன் கூழும் சோறும் கடைஇ. ஊழின் உள்இல் வறுங்கலம் திறந்து அழக்கண்டு மறப்புலி உரைத்தும் மதிய்ம் காட்டியும் நொந்த்னளாகி நுந்தையை உள்ளிப் பொடிந்த கின் செல்வி காட்டென,

(புறம் 160)

இழ்வாறு வறுமையின் வாழிடமாய்க் காட்சி அளித்தது பழந்தமிழ்ப் புலவர் ஒருவரின் இல்லம். ஆனால், அந்நிலை நெடிது நிற்கவில்லை. புலமையின் பெருமையறிந்து வாரி வழங்கவல்ல வள்ளல் ஒருவனைச் சென்று கண்டார் புலவர். அவன் புகழைப் பாடிப் பாராட்டினார். குன்றத்தனை இரு நிதியைக் கொடுத்துப் புகழ் கொண்டான் அக்கொடையாளி. இல்லாமையின் இருப்பிடமாய் இருந்த புலவர் இல்லம் பொன்னாலும் பொருளாலும் நிறைந்து விட்டது. -