பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57, கோவிந்தனார் - is

பெருஞ் செல்வம் பெற்ற அந்நிலையில், “இத்துணைக் காலம் வறுமையில் கிடந்து உழன்றோம். இறுதியில் கிடைத் தது இப் பெருவளம் இது தொலைந்து விட்டால் இது போலும் இருநிதியை மீண்டும் எய்துவது எக்காலமோ? ஆகவே, இதை நம் வாழ்நாள் வரையும் வைத்து வயிறார உண்டு நாமே வாழ வேண்டும்’ என்று போக்கில் போக வில்லை புலவர் உள்ளம். மாறாக மனைக்கிழத்தியை அழைத்தார், அம்மாநிதிப் பெருக்கத்தை அவளுக்குக் காட்டி னார். காட்டிய பின்னர் பெண்னே! இவ்வளவும் நம் உடைமைகள்தாம். ஆனால் இவற்றை நாம் மட்டுமே தனித் திருந்துண்ண எண்ணல் கூடாது. வறுமையில் கிடந்து உழன்று உழன்று, வறுமை நோய் எத்துணைக் கொடிது என்பதை அறிந்திருக்கிறோம் நாம். அவ் வறுமையில் கிடந்து உழல்வோரையே மிகப் பலராகக் கொண்டது. இம் மண்டிலம். அவர்கள் எல்லோரும் வருந்த நாம் மட்டும் வளமார் வாழ்வில் வாழ்வது முறையாகாது. ஆகவே, வல் “லாங்கு வாழ்த்தும் என எண்ணாது, எல்லார்க்கும் நீயும் கொடுப்பாயாக! என்று கூறிக் கொடையுரிமையை அவர்க் கும் கொடுத்துத் தாமும் கொடையாளியாகிப், புலமை யோடு, குன்றாக் கொடைப் புகழையும் ஈட்டிக் கொண்டர்ர். பழந்தமிழ்ப் புவவர்களின் பண்பாடு இது. -

இன்னோர்க்கு என்னாது என்னொடும்குழாது

வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும் * . எல்லோர்க்கும் கொடுமதி, மனைகிழவோயே!”

. . - - . . . . . (புறம் 163)

அப்பண்பார் நெறியில் வந்தவர் பெரும்பாணாற்றுப்படை பாடிய புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார், காஞ்சி யாண்ட காவலன் திரையனைக் கண்டார். அவன் அவர் பெருமையறிந்து பாராட்டிப் பரிசு பல அளித்தான். அவன் கொடுத்த பொருட் குவியலால் அவன் கொடைவளத்தைக்